For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தரையில் தோன்றிய 280 அடி பள்ளம்.. வெளியே வந்த 6.50 லட்ச வருட ரகசியம்.. என்னதான் நடக்குது பூமியில்!?

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் தரையில் தோன்றிய மிகப்பெரிய குழி ஒன்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி மக்கள் இந்த குழியை.. பூமிக்கு உள்ளே இருக்கும் இன்னொரு உலகத்திற்கான பாதை என்று கூறி வருகிறார்கள்.

Recommended Video

    Russia Hole In Earth | ரஷ்யாவின் மர்ம பள்ளம் | Mysterious Hole In Siberia | #World

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் சீனாவில் 630 அடி குழி கண்டுபிடிக்கப்பட்டது. இது மொத்தம் 630 அடி ஆழம் கொண்டு இருக்கிறது. அதேபோல் 1000 அடி நீளம். 490 அடி அகலம் கொண்டு இருக்கிறது.

    தெற்கு சீனாவில் இருக்கும் குவாங்சி ஜுவான் பகுதியில் இந்த குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    இத்தனை நாட்களாக இப்படி ஒரு குழி அங்கு இருப்பதே தெரியாது. இப்போதுதான் இந்த அதிசயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ரஷ்யா குழி

    ரஷ்யா குழி

    இந்த நிலையில்தான் ரஷ்யாவில் தரையில் தோன்றிய மிகப்பெரிய குழி ஒன்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த குழி இப்படி தோன்றவில்லை.. 1980லேயே இந்த குழி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும் ஒவ்வொரு வருடமும் இந்த குழியின் ஆழம் அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது இதன் ஆழம் 6 அடி கூட இல்லை. ஆனால் கடந்த வாரம் இந்த குழியை மீண்டும் அளந்து உள்ளனர்.

    குழியின் ஆழம்

    குழியின் ஆழம்

    அப்போது குழியின் ஆழம் 282 அடி என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு குழியின் அகலம் 1 கிலோ மீட்டர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 வருடங்களில் இந்த குழி தினமும் பெரிதாகிக்கொண்டே சென்று தற்போது ராட்சச குழியாக உருவெடுத்துள்ளது. இதனால்தான் அப்பகுதி மக்கள் இந்த குழியை.. பூமிக்கு உள்ளே இருக்கும் இன்னொரு உலகத்திற்கான பாதை என்று கூறி வருகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த குழியில் கீழே செல்ல செல்ல பூமியின் பழைய அடுக்குகள் தெரிய தொடங்கி உள்ளன.

    மண் அடுக்குகள்

    மண் அடுக்குகள்

    அதன்படி பாதி தூரத்திலேயே 2 லட்சம் வருடம் பழைய பூமியின் மண் அடுக்குகள் இங்கு கண்டுடிபிடிக்கப்பட்டு இருக்கின்றன. முழு ஆழத்திற்கு சென்றால்.. அதாவது 282 அடிக்கு கீழே சென்றால் அங்கு இருக்கும் மண் அடுக்கு 6. 50 லட்சம் ஆண்டு பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது பூமி 6.50 லட்சம் வருடத்திற்கு எப்படி இருந்தது, மண் எப்படி இருந்தது என்ற ரகசியத்தை தெரிவிக்கும் வகையில் இந்த குழி ஏற்பட்டுள்ளது.

     என்ன காரணம்

    என்ன காரணம்

    ரஷ்யாவில் சமீப காலமாக பெர்மாபார்ஸ்ட் உருக தொடங்கி உள்ளன. அதாவது பல லட்சம் ஆண்டுகளாக உறைந்து இருக்கும் பூமியின் கீழ் பகுதி உருக தொடங்கி உள்ளது. சைபீரியாவில் இதனால் பல இடங்களில் பெர்மாபார்ஸ்ட் மீது கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிய தொடங்கி உள்ளன. வெப்பநிலை அதிகரிப்பதால் இப்படி பெர்மாபார்ஸ்ட் உருகி அங்கு நீர் ஏற்படுகிறது.

    பெர்மாபார்ஸ்ட்

    பெர்மாபார்ஸ்ட்

    சைபீரியாவில் பல இடங்களில் இப்படி அடிக்கடி பல இடங்களில் ஐஸ் உருகி புதிய ஆறுகள் ஏற்படுகின்றன. இதனால் மற்ற இடங்களில் இருக்கும் பகுதிகளில் குழி ஏற்படுகிறது. அதன் விளைவாகவே ரஷ்யாவில் இந்த பெரிய குழி ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலகம் முழுக்க வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது ரஷ்யாவில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது.

    English summary
    A huge crater in Russia: Why are people calling it a mouth to the hell? ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் தரையில் தோன்றிய மிகப்பெரிய குழி ஒன்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X