For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயோ வார் ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட கசிவு.. கொரோனோ வைரஸ் உருவானது எப்படி? அதிர்ச்சி தரும் தகவல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவை புரட்டிப்போட்ட கோரோனா வைரஸ்! தெரிந்து கொள்ள வேண்டியவை

    பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அந்நாட்டின் பயோ வார் ஆய்வு கூடத்தில் இருந்து கசிந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    கொரோனா வைரஸ் அச்சம் உலகம் முழுக்க பரவி வருகிறது. சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 80 பேர் பலியாகி உள்ளனர். 2000 பேர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் மற்ற நாடுகளிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சீனாவில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. செவிலியர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ சீனாவில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. செவிலியர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

    ராணுவம் எப்படி

    ராணுவம் எப்படி

    சீனாவில் வேகமாக பரவி வரும் இந்த கொரோனா வைரஸ், சீனாவின் ராணுவம் செய்த தவறால் கூட நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். உலகம் முழுக்க வல்லரசு நாடுகள் தற்போது பயோ வார் எனப்படும் உயிரியல் போருக்காக தயாராகி வருகிறது. சீனா, இஸ்ரேல், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயோ ஆயுதங்களை தயாரித்து வருகிறது. ஏழாம் அறிவு படத்தில் வருவது போல மோசமான நோய் கிருமிகளை உருவாக்கி அதை எதிரி நாட்டிற்கு பரப்புவதே பயோ வார் ஆகும்.

    சீனா ஆர்வம்

    சீனா ஆர்வம்

    1990 களில் இருந்து பயோ ஆயுதங்களை தயாரிப்பதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக அந்நாடு வுஹன் நகரில் இருக்கும் பயோ ஆராய்ச்சி நிறுவனத்தை 2015ல் புதுப்பித்தது. அங்கு இருக்கும் வுஹன் இன்ஸ்டிடுயூட் ஆப் வைராலஜியில்தான் பயோ ஆயுதங்கள் தயாரிப்படுகிறது. சீனாவின் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இந்த பகுதி உள்ளது. இந்த பகுதியில் நிறைய ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக புகார் உள்ளது.

    வைரஸ் ஆராய்ச்சி

    வைரஸ் ஆராய்ச்சி

    சீனாவில் இருக்கும் ஆய்வு கூடங்களில் ராணுவம் நேரடியாக தொடர்பில் இருக்கும் ஒரே ஆய்வு கூடம் இதுதான். இங்கு மிக மோசமான வைரஸ்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் இங்கிருந்து வெளியேறி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். வுஹன் நகரில்தான் கொரோனா வைரஸ் உருவானது. இது விலங்கில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    உண்மையான காரணம்

    உண்மையான காரணம்

    ஆனால் பயோ சோதனை கூடத்தில் நடந்த தவறுதான் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று புகார் வைக்கப்படுகிறது. கொரோனா வைரசை வைத்து சீனா ஆயுதங்களை தயாரிக்க நினைத்து இருக்கும். கடைசியில் அது தவறுதலாக கசிந்து வெளியே வந்து இருக்கும். இதனால் சீனா மக்களே தற்போது சாக தொடங்கி இருக்கிறார்கள். சீனாவின் தவறாகத்தான் இது இருக்கும் என்கிறார்கள்.

    எப்படி பரவியது

    எப்படி பரவியது

    சீனாவின் இதே லேப்பில்தான் இதற்கு முன் கொரோனா வைரஸின் இன்னொரு நோயான சார்ஸ் குறித்து ஆராய்ச்சி செய்தனர். அதன்பின் பன்றிக் காய்ச்சல், எபோலா குறித்தும் ஆராய்ச்சி செய்தனர். அதேபோல் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி இங்கு தவறாக முடிந்திருக்கலாம். இதை ஆராய்ச்சி செய்த நபர் யாருக்காவது வைரஸ் தாக்கி, அது அப்படியே பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    என்ன விலங்கு

    என்ன விலங்கு

    அதேபோல் கொரோனா வைரஸை ஏதாவது விலங்கில் சோதித்து இருக்க கூட வாய்ப்புள்ளது. அதில் ஏதாவது தவறு நிகழ்ந்து, அந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளது. இதனால்தான் வுஹன் நகரம் மொத்தமும் பாதித்துள்ளது என்கிறார்கள். இதே புகாரை இஸ்ரேல் ராணுவ அதிகாரிகளும் வைத்துள்ளனர். இதற்கு பின் பெரிய தவறு நடந்து, அதை சீனா மறைக்கிறது என்று புகார் வைக்கப்படுகிறது.

    English summary
    A leak in Wuhan Bio War Lab might have created Coronavirus in China according to Chineses news reports.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X