For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிறைய பேர் அட்மிட் ஆகுறாங்க.. எதுவுமே புரியல.. ரஷ்யாவின் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்ட பரபரப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஷ்யாவில் வெடித்தது அமெரிக்காவின் போட்டியான அணு உலை?!

    மாஸ்கோ: ரஷ்யாவில் அணு கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் அங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு எதிராக அந்நாட்டு மருத்துவர்கள் தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    ரஷ்யாவில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்து ஒன்றும் அது தொடர்பான விவரங்களும் உலகம் முழுக்க தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து இருக்கிறது. ரஷ்யாவில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அணு ஆயுத சோதனை மையம் ஒன்றுக்கு அருகே வெடிவிபத்து ஏற்பட்டது.

    ரஷ்யாவில் நேனோக்சா ஏவுகணை சோதனை மையம் அருகே இருக்கும் வைட்-சி என்ற பகுதியில் உள்ள அணு மின்னணு நிலையம் அருகே இந்த விபத்து ஏற்பட்டது. ஆனால் இந்த விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. இது தொடர்பான பல முக்கிய ரகசியங்களை வெளி உலகிடம் இருந்து ரஷ்யா மறைத்து வருகிறது.

    மொத்தமாக மறைத்துவிட்டார்கள்.. உலகை அதிர வைக்கும் ரஷ்யாவின் அணு ஏவுகணை.. வெளிவரும் உண்மைகள்! மொத்தமாக மறைத்துவிட்டார்கள்.. உலகை அதிர வைக்கும் ரஷ்யாவின் அணு ஏவுகணை.. வெளிவரும் உண்மைகள்!

    இதுவரை தெரிந்தது என்ன

    இதுவரை தெரிந்தது என்ன

    இந்த விபத்து ஒன்றும் அணு ஆயுத சோதனை விபத்து கிடையாது, அணு சக்தி ஆய்வு மையத்தில் ஏற்பட்ட சிறிய விபத்து என்று ரஷ்யா கூறி வருகிறது . ஆனால் அமெரிக்காவோ இது அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணை ஒன்றில் ஏற்பட்ட விபத்து. ரஷ்யா புத்தம் புதிய அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அதை பற்றிய சோதனையில் இந்த விபத்து ஏற்பட்டது என்று அமெரிக்கா கூறி வருகிறது.

    இரண்டு பேரும்

    இரண்டு பேரும்

    ஆனால் இரண்டு நாடுகளும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஒன்றாக கருத்து தெரிவித்து வருகிறது. அதன்படி விபத்து ஏற்பட்ட பகுதியில் அதிக அளவில் தற்போது அணு கதிர் வீச்சு இருக்கிறது. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று இரண்டு நாடுகளும் வலியுறுத்தி வருகிறது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    இந்த நிலையில் ரஷ்ய மருத்துவமனைகளில் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 20 பேர் வரை அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மருத்துவர்கள்

    மருத்துவர்கள்

    மருத்துவர்களும், எங்களிடம் அணு ஆயுத விபத்து குறித்து எதுவுமே சொல்லவில்லை. நிறைய பேர் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் எங்களிடம் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இப்போது இல்லை. இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    எப்படி

    எப்படி

    இந்த விபத்தில் ஏவுகணை எஞ்சினியர் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இதை புடின் மக்களிடம் இருந்து மறைக்கிறார் என்று அமெரிக்கா தெரிவித்து வருகிறது. இதை பற்றி டிரம்ப் இன்னும் வாய் திறக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் உளவுத்துறை இதை தொடர்ந்து விசாரிக்க உள்ளது.

    English summary
    A lot of the people are admitting in Hospital due to Russia's failed in Atomic missile test - Sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X