For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உதிரி பாகங்களை வாங்கி சொந்தமாக ஐபோன் தயாரித்து இளைஞர் அசத்தல்

சீனாவில் உள்ள மின்னணு சாதன கடைகளில் மொபைல் பாகங்களை தனித்தனியாக வாங்கி தனக்கான பிரத்யேக ஐபோனை சீன இளைஞர் ஒருவர் தயாரித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் உள்ள மின்னணு சாதனங்கள் விற்கும் கடைகளில் தனித்தனியாக மொபைல் பாகங்களை பெற்றுக் கொண்டு தனக்கான பிரத்யேக ஐபோனை இளைஞர் ஒருவர் தயாரித்துள்ளார்.

அமெரிக்காவில் சிலிக்கான்வேலியில் பொறியாளராக பணியாற்றுபவர் ஸ்காட்டி ஆலன். சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர் ஒருவர் ஐபோனை அசம்பிள் செய்வதற்கான யோசனையை தெரிவத்தார்.

A man buys mobile parts in China and assembled his own Iphone

ஏற்கெனவே ஸ்காட்டி ஐபோன் 6 எஸ் மாடலை பயன்படுத்தி வருவதால் அந்த மாடலையே தயாரிக்க திட்டமிட்டார். இதனால் அவர் அவர் சீனாவில் ஷான்ஷென் பகுதியில் உள்ள மின்னணு கடைகளில் கிடைக்கும் ஐபோனின் உதிரிபாகங்களை வாங்கி அவற்றை அசம்பிள் செய்து புதிய ஐபோனை உருவாக்கியுள்ளார்.

ஐபோனை தயாரிக்க திரை, ஷெல், பேட்டரி மற்றும் லாஜிக் போர்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தினார். லாஜிக் போர்டினை முழுமையாக தயாரிக்க முடியாது என்பதால் அதை முழுமையாக வாங்கி விட்டார். இத்துடன் போன் பேட்டரியை இந்திய மதிப்பில் ரூ.322-க்கு வாங்கினார். மேலும் ஐபோனை தயாரிப்பது குறித்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

English summary
An Engineer from America has bought separate parts of iphone and assembled Iphone 6S model on his own. He also released the video of how to assemble Iphone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X