For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடுத்தெருவில் விழுந்து கிடந்த சடலம்.. வுஹான் நகர கொடுமை.. உலுக்கி எடுக்கும் கொரோனா வைரஸ்

சீனாவின் வுஹான் தெருவில் சடலம் ஒன்று விழுந்து கிடந்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவில் சாலையில் சுருண்டு விழும் மக்கள்

    பீஜிங்: நகரில் தெருவிலேயே சடலம் விழுந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது...! சீனாவின் வுஹான் நகரில் ஒரு பர்னிச்சர் கடை வாசலில் இந்த சடலம் விழுந்தது கிடந்தது.

    உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸின் துவக்கம் சீனாவின் வுஹான் நகரில்தான் துவங்கியது.. இந்த பகுதி எப்போதுமே கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் பிஸி பகுதி ஆகும்.

    நிறைய ஷாப்பிங் மால்கள், கடைத்தெரு நிறைந்த இடம்.. ஆனால் இப்போது வெறிச்சோடி கிடக்கிறது.. இப்படி நடமாட்டம் இல்லாமல் இருந்ததே கிடையாதாம்.

    முகமூடி

    முகமூடி

    இந்நிலையில், 60 நபர் மதிக்கத்தக்க ஒருவர் இந்த தெருவில் சடலமாக விழுந்து கிடக்கிறார்.. ஒரு பர்னிச்சர் கடை வாசலில் தரையிலேயே சுருண்டு விழுந்துள்ளார்.. முகமூடி அணிந்திருக்கிறார்.. கையில் பிளாஸ்டிக் ஷாப்பிங் பேக் ஒன்றும் இருந்தது. ஆனால் யாருமே இவரை மீட்கவில்லை.

    ஆம்புலன்ஸ்

    ஆம்புலன்ஸ்

    அந்த தெருவில் ஒன்றிரண்டு பேர் மாஸ்க் அணிந்தபடி நடமாடுகிறார்களே தவிர, யாருமே சடலத்தின் அருகே போகவில்லை. அதே வழியில் நிறைய ஆம்புலன்ஸ்களும் செல்கின்றன.. அந்த பகுதி மட்டும் வாகன நெரிசலாக காணப்படுகிறது. ஆனால், தெருவில் விழுந்த கிடந்த இந்த சடலத்தை யாருமே மீட்க முன்வரவில்லை. கருப்பு நிற உடை அணிந்த நபரை ஒருவர் தூரமாக நின்று எட்டி பார்த்தபடி உள்ளார்.

    சடலம்

    சடலம்

    ஷாப்பிங் செய்ய வந்திருந்தவர் எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை.. ஆனால் நோய் பரவிடக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்துள்ளார்.. ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் இந்த சடலத்தை பார்த்து, ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.. அதற்கு பிறகுதான் எமர்ஜென்சி வண்டி வந்தது.. அவர்கள் இந்த சடலத்தின் மீது ஒரு வெள்ளை போர்வையை போர்த்திவிட்டு சென்றுவிட்டனர்.

    தொற்று மருந்து

    தொற்று மருந்து

    இதன்பிறகு போலீஸார் அந்த சூப்பர் மார்க்கெட் பகுதியை கார்ட்போர்டு பெட்டிகள் மூலம் மறைத்தனர். உடனடியாக தொற்று மருந்தும் அந்த பகுதியை சுற்றிலும் அடிக்கப்பட்டது. இதுவரை சீனாவில் 213 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.. 8 ஆயிரத்துக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைதவிர, வுஹானில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறதாம்.

    English summary
    coronavirus crisis: 60 year old man lies dead in the Wuhans street
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X