For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூரியனின் மேற்பரப்பில் பெரிய கருந்துளைகள்! அழியப்போகிறதா பூமி? நாசா சொல்வது என்ன?

சூரியனின் மேற்பரப்பில் பெரிய கருந்துளைகள் உருவாகியிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.

Google Oneindia Tamil News

வேல்ஸ்: சூரியனின் மேற்பரப்பில் பெரிய கருந்துளைகள் உருவாகியிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த கருந்துளைகளால் எந்த நேரத்திலும் பூமிக்கு போராபத்து ஏற்படும் என்றும் நாசா கூறியுள்ளது.

சூரியன் மற்றும் சூரிய மண்டலம் குறித்து அமெரிக்காவின் நாசா உட்பட உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றனர். பூமி கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வாழும் தன்மையை இழந்து வருகிறது.

வேற்றுக்கிரகங்களில் குடியறே மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். மக்கள் வாழ்வதற்கு தகுதியுடைய கோள்கள் எதுவென விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பெரிய கருந்துளைகள்

பெரிய கருந்துளைகள்

இந்நிலையில் சூரியனில் பெரிய கருந்துளைகள் உருவாகியிருப்பதை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டு பிடித்துள்ளது. நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்ட கருந்துளையை கண்டறிந்து உள்ளது.

19 மடங்கு பெரியது

19 மடங்கு பெரியது

அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த கருந்துளை பூமியை விட 19 மடங்கு பெரியதாகும்.

குளிர்ச்சியாக இருக்கும்

குளிர்ச்சியாக இருக்கும்

இந்த பகுதி சூரியனின் மற்றபகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கருந்துளை பகுதி சூரிய கதிர்களை உற்பத்தி செய்யும் பகுதி என்பதும் நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொடிய கதிர்வீச்சு

கொடிய கதிர்வீச்சு

இந்த பகுதி பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகளை வீசச்செய்கிறது. இந்த சீற்றங்கள் நமது சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய வெடிப்பு நிகழ்வுகளாக இருக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. அவைகள் சூரியனின் பிரகாசமான பகுதிகளாக காணப்படுகின்றன. இவை சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரங்கள் வரை நீடிக்கிறது என்றும் நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.

சூரியனின் இறுதிக்கட்டம்

சூரியனின் இறுதிக்கட்டம்

இதன்மூலம் சூரியன் தனது வாழ்நாளின் இறுதி கட்டத்திற்குள் நுழைந்து உள்ளதாக கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் ஒரு பேரழிவு வெடிப்பு நிகழலலாம் என்றும் சூரியன் வெளியிடும் அதிக ஆற்றலில் புதிய தீவிர ஊதா கதிர்கள் வெளியிடுவதை காட்டுகிறது என்றும் நாசா கூறியுள்ளது.

மனித குலத்துக்கும் ஆபத்து

மனித குலத்துக்கும் ஆபத்து

மனிதர்களுக்கும் சுற்று சூக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியது என்றும் இதனால் தாவரங்கள் அழியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இதனால் மனித குலத்துக்கு ஆபத்து என்றும் நாசா கூறியுள்ளது.

English summary
NASA’s Solar Dynamics Observatory has detected a massive sunspot called AR2665 that’s 74,560 miles wide – about 19 times bigger than Earth.Sunspots are dark regions which are cooler than the surrounding areas and are known to produce solar flares.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X