For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்வெளியில் உள்ள தந்தைக்கு கார்கள் மூலம் 'படம்' வரைந்து மகள் விடும் தூது: தீயாக பரவும் வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

ஹூஸ்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும் தனது தந்தைக்கு அனுப்பிய தகவல் பற்றிய வீடியோ இணையதளத்தில் பிரபலமாகியுள்ளது.

A message by a daughter to her father in outer space

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் இருக்கும் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் ஸ்டெபனி. அவருக்கு அவரது தந்தை என்றால் உயிர். அவரது தந்தை விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இதனால் சிறுமிக்கு தனது தந்தையுடன் நேரம் செலவிட முடியவில்லையே என்ற கவலை. பிற குழந்தைகள் எல்லாம் தந்தையுடன் விளையாடுகையில், வெளியே செல்கையில் அதை பார்த்து பார்த்து ஏங்குகிறார் ஸ்டெபனி.

இந்நிலையில் தான் தனது தந்தை மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளோம் என்பதை அவருக்கு தெரிவிக்க விரும்பினார் ஸ்டெபனி. ஸ்டெபனியின் ஆசையை நிறைவேற்றி வைக்க ஹுன்டாய் நிறுவனம் முன் வந்தது.

ஒரு பெரிய பொட்டல் இடத்தில் ஹுன்டாய் கார்கள் பல ஸ்டெப் லவ்ஸ் யூ அதாவது ஸ்டெப் உங்கள் மீது அன்பு வைத்துள்ளார் என்ற வடிவில் மண்ணில் தடம் பதித்தன. இதை ஸ்டெபனி ஹெலிகாப்டர் மூலம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.

A message by a daughter to her father in outer space

ஹுன்டாய் கார்கள் மண்ணில் பதித்த அந்த தகவலை விண்வெளியில் உள்ள ஸ்டெபனியின் தந்தை புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஸ்டெபனி சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் உள்ளார்.

ஹுன்டாய் மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பிரபலமாகியுள்ளது.

English summary
A touching video released by Hyundai motors is going viral on the internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X