For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறந்த குழந்தையின் உடலை 5 வருடமாக உண்டியலில் வைத்து பாதுகாத்த பெண்.. பரபரப்பு காரணம்!

ஜப்பானை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய இறந்த குழந்தையின் உடலை 5 வருடமாக உண்டியலில் வைத்து பாதுகாத்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய இறந்த குழந்தையின் உடலை 5 வருடமாக உண்டியலில் வைத்து பாதுகாத்து இருக்கிறார்.

இவரின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இவர் டோக்கியோ அருகே உள்ள யோட்சியா என்ற பகுதியில் வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இவர் தன்னுடைய இறந்த குழந்தையின் உடலை உண்டியலில் பலகாலமாக பாதுகாப்பாக வைத்துள்ளார். இதற்கு வித்தியாசமான விளக்கமும் அளித்துள்ளார்.

இறந்து பிறந்த குழந்தை

இறந்து பிறந்த குழந்தை

அவருக்கு ஐந்து வருடங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அவர் கணவன் இல்லாத காரணத்தால் தனியாக வசித்து வந்துள்ளார். ஆனால் பிறந்த குழந்தை இரண்டு மணி நேரத்தில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

என்ன செய்தார் தெரியுமா

என்ன செய்தார் தெரியுமா

இந்த நிலையில் அந்த குழந்தை இறந்த காரணத்தால் அந்த பெண் வசித்திருந்த வீட்டில் இருந்து அவரை காலி செய்யும்படி வீட்டு உரிமையாளர் தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக அந்த இறந்த குழந்தையை உண்டியல் ஒன்றில் வைத்து வீடு மாறி இருக்கிறார் அந்த பெண். பின் அந்த உண்டியலுடன் வாழவும் பழகியுள்ளார்.

5 வருடம் சுற்றி இருக்கிறார்

5 வருடம் சுற்றி இருக்கிறார்

மொத்தமாக ஐந்து வருடம் இப்படி அந்த பெண் உண்டியலில் குழந்தையை வைத்துக் கொண்டு வாழ்ந்து இருக்கிறார். இதில் 4 முறை இவர் வீடு மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எல்லா இடங்களுக்கு மாறும்போது இந்த உண்டியலையும் எடுத்து சென்றுள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்த குழந்தை இருக்கும் உண்டியல்தான் தனக்கு அதிர்ஷ்டம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தனக்கு இருப்பது எல்லாம் அந்த குழந்தை மட்டுமே, அதையும் இழக்க விரும்பவில்லை. இந்த குழந்தையை புதைத்துவிட்டால், எனக்கு மீண்டும் குழந்தை பிறக்காது என்று அச்சமாக இருந்தது என்றுள்ளார். தற்போது இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

English summary
A mother dumped her baby's body in a Hundi for 5 years in Japan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X