For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐயயோ கடைசி நேரத்தில் டயரை காணோம்.. முன்பக்கம் உரசியபடி தரையிறங்கிய விமானம்.. பயணிகள் பீதி

Google Oneindia Tamil News

Recommended Video

    முன்புற டயர் இல்லாமல் உரசியபடி தரையிறங்கிய விமானம்-வீடியோ

    யங்கூன்: முன்புற டயர் இல்லாமல், மியான்மர் விமானம் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அதிருஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதுபோன்ற அவசர தரையிறக்கம், இந்த வாரத்தில் 2வது முறையாக அந்த நாட்டில் நடந்துள்ளது, விமான பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    A Myanmar plane landed with out front weel

    மியான்மர் ஏர்லைன் விமானம் யூபி-103- எம்ப்ரேர்-190 வகை மாடலை சேர்ந்த இந்த விமானம், மண்டேலே நகரில் 89 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த நகரம் சுற்றுலா பயணிகள் வருகைக்கு பெயர் பெற்றதாகும்.

    விமானம் தரையிறங்கியபோது நடந்த சம்பவங்களை உள்ளடக்கியதாக, அதிகாரப்பூர்வமற்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது. அதில், விமானத்தின் முகம் பகுதி, தரையில் தட்டி நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று த்ரில் அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

    மியான்மர் உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை துணை இயக்குநர் யே டுட் ஆவுங், இதுபற்றி கூறுகையில், தரையிறக்கத்திற்கு தேவையான கியரை பைலட் போடுவதற்கு பல முறை முயன்றும், அது செயல்படவில்லை. ஆனால், விமானத்தின் முன்பக்க டயர் கீழே வரவில்லை. இதையடுத்து விமானம், அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றார்.

    இதனிடையே, விமான பயணி சோ மோ கூறுகையில், விமானம் தரையிறக்கப்பட்டபோது, முன்பகுதி தரையில் உரசியதால் சிறு அளவில், புகை எழுந்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தோம். ஆனால், நல்லவேளையாக, யாருக்கும் காயமில்லை என்று தெரிவித்தார்.

    English summary
    A Myanmar plane landed after gear failed, forcing the jet into an emergency landing with no front wheels on Sunday morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X