For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரண விளிம்பில் உள்ளவரையும் பிழைக்க வைக்கலாம்.. புதிய மருந்து கண்டுபிடிப்பு.. விஞ்ஞானிகள் அசத்தல்!

மரண விளிம்பில் உள்ளவரையும் பிழைக்க வைக்கும் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ஆக்ஸ்போர்டு: மரண விளிம்பில் உள்ளவரையும் பிழைக்க வைக்கும் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மூலம் மரண விளிம்பில் உள்ள ஒரு நபரை சுற்றியுள்ளவர்களிடம் 4 மணிநேரம் பேச வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித மரணத்தை வெல்லும் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படாத என நெருங்கிய உறவுகளை இழக்கும் நெஞ்சங்கள் நினைப்பதுண்டு. மரணத்தை வெல்லும் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படாதா? மரணத்துக்குப் பின் என்ன நடக்கும்? மரணமடைபவர்கள் ஆன்மா எங்கு செல்லும்? மறுபிறவி உண்டா என்பதெல்லாம் புதிராகவே உள்ளது.

இதுதொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் மரணத்தை தள்ளிப்போடும் மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மரணத்தை தள்ளிப்போடலாம்

மரணத்தை தள்ளிப்போடலாம்

மரண விளிம்பில் உள்ளவரை சுமார் 4 மணி நேரம் வரை உயிர் பிழைக்க வைத்து சுற்றி உள்ளவர்களுடன் பேச வைக்கும் புதிய வகை மருந்து ஒன்று கண்டறியபட்டு உள்ளது. மரண தருவாயில் இருக்கும் நோயாளிகளை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வகை தூக்கமின்மை மருந்து உதவுகிறது.

வியக்க வைக்கும் விளைவுகள்

வியக்க வைக்கும் விளைவுகள்

சோல்பிடிம் என்ற மருந்து மரண தருவாயில் உள்ள மனிதர்களின் உடலில் பல்வேறு நிலைகளில் பல்வேறு வியக்க வைக்கும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உடல்நிலை மேம்படுவது கண்டுபிடிப்பு

உடல்நிலை மேம்படுவது கண்டுபிடிப்பு

மிச்சிகன் பல்கலைக் கழக வல்லுனர்கள் கோமா,பார்கின்சன் நோய், பக்கவாதம் மற்றும் அதிர்ச்சிகரமான மூளை காயங்கள் அனுபவித்தவர்கள் உள்பட 20 நரம்பியல் பிரச்சனை உள்ளவர்களிடம் இந்த மருந்து எப்படி வேலை செய்கிறதுமு என ஆய்வு நடத்தினர். இதில் மருந்து கொடுக்கப்பட்டப்பிறகு அவர்களின் உடல் நிலை மேம்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மரண தருவாயில் பேச முயற்சி

மரண தருவாயில் பேச முயற்சி

இந்த ஆய்வு குறித்து பீட்டர்சன் என்ற நரம்பியல் நிபுணர் கூறும் போது, சோல்பிடிம் மருந்து கொடுத்த பிறகு குறைந்தபட்ச உணர்வுள்ள நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். அங்கு அவர்கள் சுற்றியுள்ளவர்களுடன் பேச முயற்சித்தாக அவர் கூறினார்.

4 மணிநேரம் நீட்டிக்கலாம்

4 மணிநேரம் நீட்டிக்கலாம்

இந்த அதிசய முரண்பாடுகளில் ஒன்று, தூக்கமின்மை அல்லது நரம்பியல் நிலைமைகள் கொண்ட நோயாளிகளுக்கு எதிர் தூக்கமின்மை இருப்பதால், தூக்கமின்மையின் விளைவுகள் காணப்படுகின்றன என்றார். இந்த சோல்பிடிம் மருத்தின் விளைவு 4 மணி நேரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A new drug that has been found to survive in the corner of death. This drug has been reported make a person to talk on the verge of death for 4 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X