For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண் மருத்துவ சிகிச்சையில் புதிய வரலாறு படைக்க வழி வகுத்த மூவர் அணி! #NobelPrize

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: கண் மருத்துவ அறுவைச் சிகிச்சைத் துறையில் புதிய ஒளி பிறந்துள்ளது 3 விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பால்.

A new invention in Laser technolgy brings the Nobel to these three

ஆர்தர் அஷ்கின், ஜெரார்ட் மெளரு மற்றும் டோனா ஸ்டிக்லேன்ட் ஆகியோர்தான் இந்த தளகர்த்தர்கள். லேசர் தொழில்நுட்பத்தில் புதிய உத்திகளை கண்டுபிடித்துள்ளது இந்த விஞ்ஞானிகள் குழு. இதற்காகவே இவர்களுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

ஜெரார்ட் மற்றும் டோனா ஆகியோர் உருவாக்கியுள்ள லேசர் தொழில்நுட்ப முறைக்கு சிபிஏ அதாவது chirped pulse amplification என்று பெயர். மிக மிக நுண்ணிய லேசர் கதிர்களை விரிவாக்கி அதை பன்மடங்கு பெருக்கி ஒன்றாக இணைத்து அதிக அதிர்வுகளை ஏற்படுத்துவதே இவர்கள் உருவாக்கியுள்ள தொழில்நுட்பமாகும்.


இப்படிச் செய்வதன் மூலம் இந்த லேசர் கற்றையானது இன்னும் அதிக திறன் வாய்ந்ததாக, வழக்கத்தை விட மிகவும் நுட்பமாக ஊடுருவிச் செல்லும் திறனுடன் இருக்கும். இந்த புதிய தொழில்நுட்பம் கண் அறுவைச் சிகிச்சையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தொழில்துறையிலும் இந்த லேசர் தொழில்நுட்பம் புரட்சி படைக்கும்.

இயந்திரங்களில் துளையிடும் பணிகளில் இந்த லேசர் கற்றையானது மிகப் பெரிய அளவில் வேலையை சுலபமாக்கும், நுட்பத்துடன் இனி பணிகளை மேற்கொள்ள இது உதவும்.

ஜெரார்ட் மெளரு மற்றும் டோனா ஆகியோரின் கண்டுபிடிப்பானது, இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்துள்ள லேசர் ஒளிக்கற்றைகளை விட மிக மிக குறுகியது, மிகவும் சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mourou and Strickland’s technique is known as chirped pulse amplication, CPA. Take a short laser pulse, stretch it in time, amplify it and squeeze it together again. The new invention in Laser technolgy has brought the Nobel to them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X