For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரியனை விட பெரிய "சூப்பர் ஸ்டார்".. கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. தீவிர ஆய்வு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: பூமியில் இருந்து 640 ஒளிஆண்டு தூரத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர்.

சூரியனைவிட 4 மடங்கு பெரியதான அந்த நட்சத்திரத்தை சிலி நாட்டின், அடகாமா பாலைவனத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

ராட்சத தொலைநோக்கி மூலம் அந்த நட்சத்திரத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது ஒழுங்கற்ற பரப்புடனும், வாயு மண்டலத்துடனும் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

விண்வெளி ரகசியங்கள்:

விண்வெளி ரகசியங்கள்:

முதன் முறையாக அந்த நட்சத்திரத்தை புகைப்படம் எடுத்துள்ள விஞ்ஞானிகள், இதன் மூலம் விண்வெளி குறித்த மேலும் பல தகவல்கள் தெரிய வரும் என்று கூறியுள்ளனர்.

100000 கோடி நட்சத்திரங்கள்:

100000 கோடி நட்சத்திரங்கள்:

எண்ணற்ற நட்சத்திரங்களைக் கொண்டது அண்டம் ஆகும். நமது சூரியன் அடங்கிய அண்டத்துக்கு ஆகாய கங்கை என்று பெயர். ஆகாய கங்கை அண்டத்தில் சூரியன் உட்படக் குறைந்தது 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன.

நிபுணர்கள் கணக்கீடு:

நிபுணர்கள் கணக்கீடு:

நமது அண்டத்தில் மட்டும் நமது சூரியன் போன்ற நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற பூமி மாதிரியான கிரகங்களின் எண்ணிக்கை 1,100 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.

உயிரின வாய்ப்பு அதிகம்:

உயிரின வாய்ப்பு அதிகம்:

அதாவது, இவை உயிரின வாய்ப்பு கொண்டவை. சிவப்புக் குள்ளன் நட்சத்திரங்களையும் கணக்கில் கொண்டால் பூமி மாதிரி கிரகங்கள் 4,000 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

English summary
A new star found in photo and scientists check it for new information.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X