For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திடீரென விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. சீனாவில் புதிய வகை "பிளேக் நோய்".. மக்கள் அச்சம்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவின் வடக்கு பகுதியில் பல்வேறு மாகாணங்களில் பிளேக் நோய் பரவ வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Bubonic plague சீனாவில் அடுத்த தொற்றுநோய்? மக்களுக்கு எச்சரிக்கை

    சீனாவில் முதல் முதலாக பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க தற்போது பெரிய பெண்டமிக் (pandamic) நோய் தாக்குதலாக மாறியுள்ளது. உலகின் சிறிய நாடுகள் தொடங்கி பெரிய நாடுகள் வரை இந்த கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தற்போது சீனாவில் இன்னொரு பெரிய நோய் ஒன்று தாக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதன்படி சீனாவில் புபோனிக் பிளேக் (bubonic plague) என்ற பழைய பிளேக் வகை ஒன்று பரவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்;.

    இந்தியாவை தொடர்ந்து பூட்டான் எல்லைகளை ஆக்கிரமிக்க முயற்சி- சீனாவுக்கு கடும் கண்டனம் இந்தியாவை தொடர்ந்து பூட்டான் எல்லைகளை ஆக்கிரமிக்க முயற்சி- சீனாவுக்கு கடும் கண்டனம்

    என்ன நோய்

    என்ன நோய்

    அதன்படி சீனாவில் இருக்கும் பயன்னூர், மங்கோலியாவின் உட்பகுதியில் ஆகிய இடங்களில் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அந்த இடங்களில் மூன்றாம் கட்ட புபோனிக் பிளேக் (bubonic plague) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    அதன்படி சீனாவில் பயன்னூர் பகுதியில் சிலர் புபோனிக் பிளேக் (bubonic plague) அறிகுறியுடன் அனுமதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களும் இவர்கள் புபோனிக் பிளேக் (bubonic plague) அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர். இதனால் 2020 இறுதிவரை மக்கள் அங்கே கவனமாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

    என்ன அச்சம்

    என்ன அச்சம்

    தற்போது பிளேக் நோய் பரவ வாய்ப்புள்ளது. அதனால் மக்கள் தங்களை தனிமை படுத்திக் கொண்டு,கவனமாக இருக்க வேண்டும். காய்ச்சல் இருப்பவர்கள் உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். கடந்த ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்தே அங்கே புபோனிக் பிளேக் (bubonic plague) அறிகுறியுடன் வரிசையாக பலர் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    பின்னணி காரணம்

    பின்னணி காரணம்

    அதிலும் இப்படி புபோனிக் பிளேக் (bubonic plague) அறிகுறியுடன் அனுமதி ஆகும் எல்லோரும் மர்மோட் இறைச்சி சாப்பிட்டு உள்ளனர்.மரமோட் என்பது சீனாவில் காணப்படும் ஒரு வகை அணில் ஆகும். இதை சாப்பிட்டதன் மூலம் இவர்களுக்கு இந்த புபோனிக் பிளேக் (bubonic plague) பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் அங்கே மர்மோட் இறைச்சி சாப்பிடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

    தனிமைப்படுத்தினார்கள்

    தனிமைப்படுத்தினார்கள்

    தற்போது இந்த இறைச்சி சாப்பிட்ட, சாப்பிட்ட நபர்களுடன் தொடர்ந்து கொண்ட 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். புபோனிக் பிளேக் என்பது பறவைகள், விலங்குகள் மூலம் பரவ கூடிய ஒரு வகை வைரஸ் ஆகும். இந்த வைரஸ் உடலில் இருக்கும் திரவங்கள் மூலம் பரவும். உடலில் இருக்கும் வெள்ளை அணுக்களை தாக்கும். காய்ச்சல்தான் இதன் அறிகுறி.

    அறிகுறி என்ன

    அறிகுறி என்ன

    மூச்சு அடைப்பு, தீவிர காய்ச்சல்தான் இதன் அறிகுறி ஆகும். இதை கவனிக்கவில்லை என்றால் 24 மணி நேரத்தில் உடல் முழுக்க வைரஸ் பரவி பலி ஆக வாய்ப்புள்ளது. கடந்த வருடம் இந்த பிளேக் காரணமாக மங்கோலியாவில் இரண்டு பேர் பலியானார்கள். பிளேக் என்பது உலகை தாக்கிய கொடுமையான நோய்களில் ஒன்றாகும். பல்வேறு வகையான பிளேக் இதுவரை மூன்று முறை அடுத்தடுத்து உலகை தாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவை தொடர்ந்து பூட்டான் எல்லைகளை ஆக்கிரமிக்க முயற்சி- சீனாவுக்கு கடும் கண்டனம்

    English summary
    A new type of Bubonic Plague may spread in China:Alerts officials.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X