For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தரையிறங்கும் போது விபத்து.. மூன்றாக உடைந்த விமானம்.. இஸ்தான்புல்லில் அதிர்ச்சி.. ஒருவர் பலி!

இஸ்தான்புல்லில் இன்று காலை விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    World news update 06-02-2020 | அக்கரை சீமை 06-02-2020

    இஸ்தான்புல்: இஸ்தான்புல்லில் இன்று காலை விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். 157 பேர் இதில் படுகாயம் அடைந்தனர்.

    துருக்கியில் இருக்கும் இஸ்மிர் விமான நிலையத்தில் இருந்து இஸ்தான்புல்லில் உள்ள சபீனா விமான நிலையம் நோக்கி இன்று அதிகாலை பேகாசஸ் விமானம் புறப்பட்டுள்ளது. காலை 6.30 மணி அளவில் அந்த விமானம் சபீனா விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

    ஆனால் இஸ்தான்புல்லில் இன்று மோசமான வானிலை நிலவியது. இரவு முழுக்க பெய்த மழை காரணமாக அங்கு ஓடுதளம் மிகவும் ஈரமாக காணப்பட்டது.

    தோல்வி அடைந்தது பதவி நீக்க தீர்மானம்.. டிரம்பிற்கு மாபெரும் வெற்றி.. அமெரிக்காவில் டிவிஸ்ட்! தோல்வி அடைந்தது பதவி நீக்க தீர்மானம்.. டிரம்பிற்கு மாபெரும் வெற்றி.. அமெரிக்காவில் டிவிஸ்ட்!

    என்ன மேகம்

    என்ன மேகம்

    அதேபோல் வானமும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் இன்று காலை தரையிறங்கிய விமானங்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டுதான் தரையிறங்கியது. இந்த நிலையில் அந்த பேகாசஸ் விமானம் தரையிறங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.

    என்ன விமானம்

    என்ன விமானம்

    அதேபோல் ஓடுதளமும் எங்கே இருக்கிறது என்று விமானிகளால் சரியாக கணிக்க முடியவில்லை. இதனால் ஓடுதளத்தின் தொடக்கத்திலேயே விமானம் மொத்தமாக இறங்கியது. இதனால் விமானம் தரையில் மிக வேகமாக மோதியது, மோதிய வேகத்தில் விமானம் இழுத்து செல்லப்பட்டது. விமானத்தின் வால் பகுதி இதனால் தீ பிடித்து ஏறிய தொடங்கியது.

    உடைந்து நொறுங்கியது

    உடைந்து நொறுங்கியது

    இந்த விமான விபத்தை அடுத்து, விமானம் மொத்தமாக மூன்று பாகங்களாக உடைந்து நொறுங்கியது. முன்பக்கம், நடுப்பக்கம் , பின்பக்கம் என்று மூன்று பாகங்களாக இந்த விமானம் உடைந்து நொறுங்கியது. இந்த உடைந்த பாகங்களில் இருந்து பயணிகள் பலர் வெளியே குதித்து ஓடி வந்தனர். அதேபோல் அவசர ஜன்னல் வழியாகவும் அதிக எண்ணிக்கையில் பயணிகள் வெளியே வந்தனர்.

    மரணம்

    தற்போது அங்கு மீட்பு பணிகள் மொத்தமாக முடியவில்லை. இன்னும் 5 பேர் வரை விமானத்தில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த விமானத்தில் மொத்தம் 177 பேர் பயணம் செய்தனர். இதில் 155 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் மட்டும் பலியாகி விட்டார். 6 பேருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. 5 பேருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

    English summary
    A Pegasus Airlines plane flying into Istanbul torn into 3 pieces after an accident while landing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X