For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஹா.. மென்று துப்பிய சுவிங்கம்மை வைத்து.. 5700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் உருவம் வெளியீடு

Google Oneindia Tamil News

Recommended Video

    மென்று துப்பிய சுவிங்கம்மை வைத்து பெண் உருவம் வெளியீடு

    பிருசல்ஸ்: மென்று துப்பிய சுவிங்கம்மில் இருந்த பற்களின் அடையாளத்தை வைத்து 5700 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் உருவம் வெளியிடப்பட்டுள்ளது.

    20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சிங்கார வேலன் திரைப்படத்தில் குஷ்புவின் சிறிய வயது புகைப்படத்தை எடுத்து கொண்டு ஒரு போட்டோ லேப்புக்கு மனோ, கவுண்டமணி, வடிவேல், சார்லி ஆகிய நண்பர்களுடன் கமல்ஹாசன் செல்வார். அங்கிருக்கும் பெரியவரிடம் இந்த குழந்தை தற்போது எப்படி இருக்கிறார் என தெரிய வேண்டும் என்பார்.

    10 வயதில் அந்த பெண் இப்படி இருப்பார், 12 வயதில் இப்படி இருப்பார் என கம்ப்யூட்டரில் மாற்றங்கள் செய்து கொண்டே வருவார்.

    கங்குலி மகள் சனாவா இது.. என்ன ஒரு ஆவேசம்.. அப்பா மாதிரியே.. நாட்டையே பேச வைத்துவிட்டாரே கங்குலி மகள் சனாவா இது.. என்ன ஒரு ஆவேசம்.. அப்பா மாதிரியே.. நாட்டையே பேச வைத்துவிட்டாரே

    தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    இதெல்லாம் நிஜம் தானா என நாம் அப்போது நமது நண்பர்கள் வட்டாரத்துக்குள்ளாகவே விவாதித்து கொண்டிருந்தோம். ஆனால் இன்று கடித்து துப்பிய சுவிங்கம்மில் உள்ள பற்களின் அடையாளத்தை வைத்தே ஒரு ஆணோ, பெண்ணோ எப்படி இருப்பார், எத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்பதை கணக்கிடும் அளவிற்கு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

    பெண்ணின் புகைப்படம்

    பெண்ணின் புகைப்படம்

    ஸ்காண்டிநேவியா என்ற இடத்தில் ஒரு சுவிங்கம் கண்டெடுக்கப்பட்டது. கருப்பு நிறத்தில் இருந்த அந்த சுவிங்கம்மில் பற்களின் தடயங்கள் இருந்தன. இதையடுத்து அந்த மரபணு நுண்ணுயிரிகளை வைத்து 5700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதாவது அந்த பெண் நியோலித்திக் காலத்தை சேர்ந்தவர்.

    கம்பீர காட்சி

    கம்பீர காட்சி

    வசீகரிக்கும் கண்களுடன் மிகவும் கம்பீரமாக காட்சி அளிக்கும் அந்த பெண்ணின் புகைப்படம் குறித்து கோபன்ஹாகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹேன்ஸ் ஷ்ரோடர் கூறுகையில் இந்த சுவிங்கமானது மரத்திலிருந்து எடுக்கப்படும் பசையாகும். இந்த பசை முன்னோர்களின் மரபணுக்களை கண்டறிய உதவியது. இது விலை மதிப்பில்லாதது.

    பால்டிக் கடல் பகுதி

    பால்டிக் கடல் பகுதி

    அந்த பெண்ணின் மரபணுவை வைத்து அவர் ஐரோப்பாவின் மத்திய பகுதியில் ஸ்காண்டிநேவியாவில் வேட்டையாடும் பெண் என தெரியவருகிறது. அவரது முகம் கருப்பாக இருந்திருக்கும். முடியோ கருஞ்சிவப்பு நிறமாக இருந்திருக்கும். அத்துடன் அவரது கண்களோ நீல நிறத்தில் இருந்திருக்கும். அந்த பெண் டென்மார்க்கில் உள்ள பால்டிக் கடல் பகுதியில் லோலாந்து தீவில் வசித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பேராசிரியர் குழு அந்த பெண்ணுக்கு லோலா என பெயரிட்டுள்ளது.

    தகவல்கள்

    தகவல்கள்

    அவரது உணவாக வாத்து மற்றும் ஹசல் நட்ஸ் இருந்திருக்கும். அது சரியாக ஜீரணமாகாததற்கான அறிகுறிகள் இருந்தன. இந்த சுவிங்கம்மை இவர் பல் வலி மற்றும் மற்ற நோய் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தியிருக்கலாம் என அந்த பேராசிரியர் கூறினார். சுவிங்கம்மில் உள்ள பற்களின் அடையாளத்தை வைத்தே இத்தனை தகவல்களை வெளியிட்டுள்ளது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

    English summary
    Neolithic woman's photo released by University of Copenhagen by extracting DNS from a chewed gum.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X