For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்பிக்காக எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் இந்த யூத்துகள்.. பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் பண்றாங்கப்பா!

Google Oneindia Tamil News

நியூயார்க்: தன்னைத்தானே செல்போன் மூலமாக படம் எடுத்துக் கொள்ளும் செல்பி முறை + வெறியால் மக்களிடையே பிளாஸ்டிக் சர்ஜரி அதிகரித்து வருவதாக செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன்களின் மூலம் தங்களை தாங்களே போட்டோ எடுக்கும் செல்பி முறை உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் டென்மார்க் பிரதமர் ஹெல்லீ தார்னிங் தனது செல்போனில் செல்பி மூலம் போட்டோ எடுத்துக் கொண்டார்.

A picture-perfect nose job: how the selfie is boosting demand for plastic surgery

இந்த செல்பி இத்தனை பிரபலம் ஆகியுள்ளது. அது போக இப்போது குரூப்பி, கும்பி என்றும் மக்கள் தறிகெட்டு ஓட ஆரம்பித்துள்ளனர். இந்த செல்பி மோகத்தால் அமெரிக்காவில் பித்து பிடித்து அலைவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாம்.

செல்பி மூலம் எடுக்கப்படும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்கின்றனர். அதற்காக தங்கள் முகம் மிகவும் அழகாகவும் பளிச்சென பிரகாசமாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

எனவே, தங்களின் முகத்தில் மூக்கு, கண் இமை, முக சுருக்கங்கள் போன்ற உறுப்புகளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கின்றனர். அதற்காக முகசீரமைப்பு நிபுணர்களை சந்திக்கின்றனர். அவர்களும், அதற்குரிய தொகையை பெற்றுக் கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
In the quest for the perfect selfie, some folks seem to have decided that no photo-editing app to is good enough to smooth out the wrinkles: nothing less than old-school plastic surgery will do.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X