For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்தில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்து- 4 பேர் பலி

இங்கிலாந்தில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

Google Oneindia Tamil News

பக்கிங்காம்ஷையர்: இங்கிலாந்தில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

இங்கிலாந்தின் பக்கிங்காம்ஷையர் அருகே உள்ள வேட்ஸ்டன் என்ற இடத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் போலீசார் மற்றும் மீட்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. 7 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

 முழு தகவல் தெரியவில்லை

முழு தகவல் தெரியவில்லை

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்பது குறித்த முழு தகவல் இதுவரை வெளியாகவில்லை. விபத்து நடந்த வேட்ஸ்டன் பகுதியில் ரோத்ஸ் சைல்டு அறக்கட்டளைக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது.

 பயங்கர சத்தம் கேட்டது

பயங்கர சத்தம் கேட்டது

இந்த அறக்கட்டளை 1957 ஆம் ஆண்டு முதல் அரசு சார்பாக நடைபெற்று வரும் ஒரு குடும்ப அறக்கட்டளை ஆகும். ரோத்ஸ் சைல்டு அறக்கட்டளை இங்கிலாந்தின் மிகப்பெரிய நிதியளிக்கும் குடும்பம் ஆகும். விபத்து நடந்த போது பயங்கர சத்தம் கேட்டதாக அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான எஸ்டேட் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

 தீப்பிழம்பு, கரும்புகை

தீப்பிழம்பு, கரும்புகை

தரையில் விபத்து நடைபெறவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

விபத்திற்கு பிறகு மலைப்பகுதியில் மரங்களை தாண்டி கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் தோன்றியதாகவும் எஸ்டேட் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

 விமானப் படையை சேர்ந்தது இல்லை

விமானப் படையை சேர்ந்தது இல்லை

மேலும் விபத்து நடந்த இடத்திற்கு அந்த அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ்களும் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் இங்கிலாந்து விமானப் படையை சேர்ந்தது இல்லை என்றும் ராணுவத்தை சேர்ந்தது இல்லை என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 வேட்ஸ்டன் மேனரில் இல்லை

வேட்ஸ்டன் மேனரில் இல்லை

விபத்து வேட்ஸ்டன் மேனர் பகுதியிலோ அல்லது அவர்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலோ நடைபெறவில்லை என அதன் உரிமையாளரான ரோத்ஸ் சைல்டு அறக்கட்டளை அறிவித்துள்ளது. வேட்ஸ்டன் பகுதி மிகப்பெரிய சுற்றுலாப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Several people are feared dead after a plane and helicopter crashed mid-air and plummeted to the ground close to a village in Buckinghamshire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X