For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாய்லாந்து மக்களை கவர்ந்த அபூர்வ ஆமை.. காசு கொடுத்து வாங்க தயங்கும் மக்கள்.. என்ன காரணம்!

Google Oneindia Tamil News

பாங்காங்; தாய்லாந்தில் பிறந்துள்ள இரட்டை தலை ஆமை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நூன் அவ்ஸானி என்பவர் வளர்த்து வரும் ஆமை ஒன்று குட்டிகளை ஈன்றது.

அதில் ஒரு ஆமைக்குட்டி இரு தலைகளை கொண்டதாக பிறந்தது. அல்பினோ எனப்படும் நிறமியற்றதாகவும், இரு தலைகள் கொண்டதாகவும் அபூர்வப் பிறவியாக இந்த அரிய வகை ஆமை பிறந்துள்ளது.

A rare tortoise that attracted the people of Thailand..People are reluctant to pay

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கைச் சேர்ந்த நூன் அவ்ஸானி வளர்த்த ஆமை கடந்த மார்ச் மாதம் இந்த அபூர்வகுட்டியை ஈன்றுள்ளது அவரிடம் இருக்கும் இந்த அரியவகை ஆமை குறித்து, சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.

கேஸ் அடுப்பு பைப்பில் தகதகவென மின்னிய தங்க துண்டுகள்! கேஸ் அடுப்பு பைப்பில் தகதகவென மின்னிய தங்க துண்டுகள்!

இதனையடுத்து அவ்ஸானியிடம் இருக்கும் ஆமையை ஏராளமானோர் நேரில் வந்து வியப்புடன் பார்வையிட்டுச் செல்கின்றனர். இதனையடுத்து அபூர்வ ஆமையை வைத்து தனது பண கஷ்டத்தை தீர்க்கலாமா என அவ்ஸானி யோசித்துள்ளார்.

தனது திட்டம் குறித்து பலருடன் கலந்தாலோசித்த அவர், இறுதியாக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 22 லட்சம் ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளார்

எனினும் இந்த ஆமை நிறம் அற்றதாக பிறந்திருப்பதால் நீண்டகாலம் வாழாது என பரவலாக கருத்து நிலவுகிறது. இதனால் பணம் இருக்கும் பலரும் தன்னிடம் இருக்கும் அபூர்வ ஆமையை வாங்க தயக்கம் காட்டுவதாக நூன் அவ்ஸானி வருத்தம் தெரிவித்துள்ளார்.

English summary
The twin-headed tortoise born in Thailand has greatly impressed viewers. The tortoise that nourished a Noon Ausanee house was born.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X