For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்க பேசியது சரியில்லை.. இம்ரான் கானிடம் கொடுத்த விமானத்தை திரும்ப பெற்ற சவுதி?.. என்ன நடந்தது?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொடுத்த விமானத்தை சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் கோபமாக திரும்ப பெற்றுக்கொண்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்..பாக்.கிற்கு சர்வதேச அமைப்பு குட்டு-வீடியோ

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொடுத்த விமானத்தை சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் கோபமாக திரும்ப பெற்றுக்கொண்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

    ஐநாவில் நடந்த மாநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். இம்ரான் கான் முதலில் இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றார்.

    சவுதியில் இம்ரான் கான் அந்நாட்டு அரசர் சல்மான் பின் அபுலாசிஸ் அல் சாத் உடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பிற்கு பின் அங்கிருந்து அவர் அமெரிக்கா கிளம்பி சென்றார்.

    பாஜகவுடனான நெருக்கத்தை பயன்படுத்தி... மேகதாது அணையை தடுக்கவும்- கே.எஸ்.அழகிரிபாஜகவுடனான நெருக்கத்தை பயன்படுத்தி... மேகதாது அணையை தடுக்கவும்- கே.எஸ்.அழகிரி

    எப்படி சென்றார்

    எப்படி சென்றார்

    முதலில் இம்ரான் கான் தனியார் விமானத்தில் சவுதியில் இருந்து அமெரிக்கா செல்வதாக இருந்தது. ஆனால் நீங்கள் தனியார் விமானத்தில் செல்ல கூடாது என்று சவுதி அரசர் சல்மான் இம்ரான் கானிடம் கூறிவிட்டார். இதனால் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் இம்ரான் அமெரிக்கா சென்றார்.

    என்ன விமானம்

    என்ன விமானம்

    இதற்காக சவுதி அரசு குடும்பத்திற்கு சொந்தமான விமானம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி உலகம் முழுக்க வைரலானது. அதன்பின் ஐநா மாநாடு முடிந்து தனியார் விமானம் ஒன்றில் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள், பாகிஸ்தானுக்கு திரும்பி சென்றனர். அவர்கள் திரும்பி செல்லும் போது இளவரசரின் விமானத்தை பயன்படுத்தவில்லை.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    சவுதி இளவரசரின் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதை பயன்படுத்தவில்லை என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், சவுதி இளவரசர் இம்ரான் கான் மீது கோபம் கொண்டு, தனது விமானத்தை திரும்ப அழைத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐநாவில் பேசிய சில விஷயங்களை சவுதி அரசு விரும்பவில்லை.

    என்ன மோசம்

    என்ன மோசம்

    அதிலும் துருக்கி மற்றும் மலேசியா அரசு உடன் இம்ரான் நெருக்கமாக இருந்ததும், ஈரான் அரசு உடன் இம்ரான் நெருக்கமாக இருந்ததும் சவுதிக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள். இதனால் கோபம் அடைந்த சவுதி முடி இளவரசர் தனது விமானத்தை திரும்ப பெற்றுக்கொண்டதாக கூறுகிறார்கள். இதனால்தான் இம்ரான் தனியார் விமானத்தில் திரும்பினார் என்கிறார்கள்.

    ஆனால் மறுப்பு

    ஆனால் மறுப்பு

    ஆனால் இந்த செய்தியை பாகிஸ்தான் மறுத்து உள்ளது. அமெரிக்க நாளிதழ்களில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் சவுதி முடி இளவரசரின் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே திரும்ப பெறப்பட்டது என்று பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.

    English summary
    A report claims that Saudi's Mohammed Salman took back his special flight that given to Imran Khan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X