For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெல்ஜியத்தில் வான வேடிக்கை விருந்து.. அந்தரத்தில் தொங்கியபடி சாப்பிட்ட வினோதம்

Google Oneindia Tamil News

பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் வானத்தில் பரிமாறப்பட்ட அறுசுவை உணவால் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த விருந்தில் பதிவு செய்த விருந்தினர்கள் கலந்து கொண்டு அறுசுவை உணவை சுவைத்து மகிழ்ந்தனர்.

அந்தரத்தில் அமர்ந்து சாப்பிட்ட இந்த விருந்தானது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

குடைராட்டின அமைப்பு:

குடைராட்டின அமைப்பு:

"குடை ராட்டினம்" போன்றதொரு வட்ட வடிவில் சாப்பிடும் அறை தயாரிக்கப்பட்டு, அந்நகரில் உள்ள மிக உயர்ந்த கட்டிடமான "பர்க் டியு சின்குவண்டெனெய்ர்" கட்டிடத்தின் உச்சியில் இருந்து கிரேன்களின் உதவியால் அந்தரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

சொக்க வைக்கும் விருந்து:

சொக்க வைக்கும் விருந்து:

கைதேர்ந்த பிரபல சமையல் கலைஞர் ஒருவர் அதில் இருந்தபடியே சுடச்சுட உணவு வகைகளை தயாரித்து அளிக்க, சொக்க வைக்கும் ஒயினுடன் அவை விருந்தில் கலந்து கொண்டவர்களுக்குப் பரிமாறப்பட்டன.

த்ரில்லான இருக்கைகள்:

த்ரில்லான இருக்கைகள்:

இழுத்து கட்டப்பட்ட பாதுகாப்பு பெல்ட்களுடன் இருக்கைகளில் அமர்ந்திருந்த வாடிக்கையாளர்கள், "நாம் இருப்பது பூலோகமா? இல்லை, மேல் லோகமா?" என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முடியாமல் த்ரில்லில் தவித்தனர்.

வான வேடிக்கை விருந்து:

வான வேடிக்கை விருந்து:

இந்த வினோதமான திரிசங்கு விருந்தில் கலந்து கொண்டவர்கள் பிரஸ்ஸல்ஸ் நகரின் முழு அழகையும் ரசித்தபடி விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை பதம் பார்த்தனர்.

உச்சியில் அமர்ந்து உணவு:

உச்சியில் அமர்ந்து உணவு:

வரும் 29 ஆம் தேதி வரை இந்த வான விருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களும் பதிவு செய்து இவ்விருந்தில் கலந்து கொண்டு உச்சியில் அமர்ந்து உணவை ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A new sky dinner party held in Brussels which is the metropolis of Belgium. It will happen till June 29th, officials say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X