For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

50 கிமீ வேகம்.. 110 கிமீ டிரைவர் இல்லாமல் சென்ற ரயில்.. ரயிலை நிறுத்த என்ன செய்தார்கள் தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் டிரைவர் இல்லாமல் 110 கிலோ மீட்டர் சென்ற ரயில் ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் டிரைவர் இல்லாமல் 110 கிலோ மீட்டர் சென்ற ரயில் ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ரயில் பிஎச்பி என்று தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரயில் ஆகும். இதில் பயணிகள் யாரும் செல்லவில்லை.

ரயில் பெட்டிகள் அனைத்திலும் இரும்பு தாதுக்கள் இருந்துள்ளது. இது எப்படி நடந்தது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் 2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

எப்படி ஓடியது

எப்படி ஓடியது

பிஎச்பி நிறுவனத்தின் இரும்பு தாது உற்பத்தியகத்தில் இருந்து போர்ட் ஹெட்லன்ட் நோக்கி இந்த ரயில் சென்று இருக்கிறது. அப்போது ஒரு இடத்தில் ரயில் நிலைய அதிகாரிகளின் சோதனைக்காக ரயில் ஓட்டுநர் கீழே இறங்கி இருக்கிறார். அவர் கீழே இறங்கிய சில நிமிடத்தில் அந்த ரயில் வேகமாக நகர தொடங்கி உள்ளது.

எவ்வளவு தூரம் ஓடியது

எவ்வளவு தூரம் ஓடியது

சில நிமிடத்தில் வேகம் பிடித்த ரயில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல தொடங்கி உள்ளது. சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் இந்த ரயில் இப்படியே சென்றுள்ளது. பல முக்கிய ரயில் நிலையங்களை இந்த ரயில் கடந்து சென்று இருக்கிறது.

எப்படி நிறுத்தினார்கள்

இதையடுத்து போர்ட் ஹெட்லன்ட் நகரத்திற்குள் இந்த ரயில் வந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வேகமாக தண்டவாளத்தை உடைக்கும் பணி நடந்து இருக்கிறது. போர்ட் ஹெட்லன்ட் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் முன்பு உள்ள ஆள் இல்லாத பகுதியில் தண்டவாளம் இடிக்கப்பட்டு ரயில் செயற்கையாக தடம்புரள வைக்கப்பட்டது.

மோசம் போயிட்டு

மோசம் போயிட்டு

இதன் காரணமாக பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி தடம் புரண்டது. இதனால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் மதிப்பிலான இரும்பு தாதுக்கள் மண்ணில் விழுந்து நாசமானது. இது எப்படி நடந்தது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
A train runs without the driver in Australia for 110 KM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X