For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வானிலேயே மரித்துப் போன 668 பயணிகளுக்கும்.. 37 ஊழியர்களுக்கும் "எம்எச் 17"ன் அஞ்சலி..!

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: உக்ரைன் வான் பகுதியில் ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினரால் ஏவுகணை மூலம் சுட்டு வீ்ழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச் 17 விமானத்தின் பெயரால் ஒரு டிவிட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் இந்த ஆண்டில் விமான விபத்துக்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் எம்எச் 17 விமானம் தொடர்பான தொடர்ச்சியான விவரங்களையும், புகைப்படங்களையும் இதில் போட்டு வருகின்றனர்.

10,000 பாலோயர்கள்

10,000 பாலோயர்கள்

இந்த டிவிட்டர் பக்கத்திற்கு இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலோயர்கள் கிடைத்துள்ளனர். 2644 டிவிட்கள் வெளியாகியுள்ளன. 2073 புகைப்படங்கள், வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன.

668 பயணிகளுக்கு அஞ்சலி

668 பயணிகளுக்கு அஞ்சலி

2014ம் ஆண்டு விமான விபத்துக்கள் மூலம் உயிரிழந்த 668 பயணிகளுக்கும், 37 ஊழியர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக இந்த டிவிட்டரில் கூறப்பட்டுள்ளது.

நான்கு பெரும் விமான விபத்துக்கள்

நான்கு பெரும் விமான விபத்துக்கள்

2014ம் ஆண்டு தொடங்கி இன்னும் சில மாதங்களில் முடியப் போகும் நிலையில் இதுவரை நான்கு பெரும் விமான விபத்துக்களை கண்டுள்ளது.

முதல் விபத்தில் 227 பயணிகள் -12 ஊழியர்கள்

முதல் விபத்தில் 227 பயணிகள் -12 ஊழியர்கள்

முதலில் மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 370 மாயமாகிப் போனது. அது என்ன ஆனது என்பது இதுவரை தெளிவான தகவல் இல்லை. கடலில் மூழ்கி விட்டதாக நம்பப்படுகிறது. இந்த விமானத்தில் 227 பயணிகளும், 12 ஊழியர்களும் இருந்தனர். மார்ச் 8ம் தேதி இந்த சம்பவம் நடந்தது.

2வது விபத்தில் 283 பயணிகள் - 15 ஊழியர்கள்

2வது விபத்தில் 283 பயணிகள் - 15 ஊழியர்கள்

2வது விபத்து மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17க்கு நடந்தது. உக்ரைன் மீது பறந்தபோது புரட்சிப் படையினரால் அது வீ்ழ்த்தப்பட்டது. இதில் 283 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தனர். ஜூலை 17ம் தேதி இது நடந்தது.

3வது விபத்து தைவானில்

3வது விபத்து தைவானில்

3வது விபத்து தைவானில் நடந்தது. தைவானின் ஜிஇ 222 விமானம் விபத்துக்குள்ளானதில், 48 பயணிகளும், 4 ஊழியர்களும் மரணமடைந்தனர். இது ஜூலை 23ம் தேதி நடந்தது.

4வது விபத்து ஆப்பிரிக்காவில்

4வது விபத்து ஆப்பிரிக்காவில்

அடுத்து 4வது பெரும் விபத்து அல்ஜீரிய விமானத்திற்கு ஏற்பட்டது. ஏர் அல்ஜீரி விமானம் 110 பயணிகள், 6 ஊழியர்களுடன் சென்றபோது மாலி நாட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளாகி விழுந்தது.

புகைப்படங்கள், வீடியோக்கள்

வீ்ழ்த்தப்பட்ட எம்எச் 17 விமானத்தின் சிதிலமடைந்த பாகங்கள், அதன் உருக்குலைந்த பாகங்கள் உள்ளிட்டவை குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இதில் ஏராளமாக இடம் பெற்றுள்ளன.

இனிமேல் எம்எச் 17 கிடையாது

மேலும் எம்எச் 17 என்ற பெயரை இனிமேல் பயன்படுத்துவதில்லை என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பும் இதில் இடம் பெற்றுள்ளது.

மனதை அழுத்தும் விதமாக இந்த டிவிட்டர் பக்கத்தின் காட்சிகள், புகைப்படங்கள், செய்திகள் உள்ளன.

English summary
Here is a Twitter page for the downed flight MH 17 and it has extended its deepest condolences to the 668 passengers and 37 crews who lost their lives in 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X