For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கழுத்தில் சிக்கிய டயர்... செத்துக் கொண்டிருக்கும் முதலை.. மீட்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

ஜகர்தா: இந்தோனேஷியாவில் முதலையின் கழுத்தில் மோட்டார் சைக்கிளின் டயர் ஒன்று சிக்கியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் டயருடன் தவித்து வரும் முதலையை அதில் இருந்து விடுவிப்போருக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் அரசு நடத்தும் அன்டாரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, மத்திய சுலவேசி மாகாணத்தில் பாலு ஆற்றில் 2016 முதல் டயரை கழுத்தில் சுமந்தபடி ஒரு முதலை சுற்றி வருகிறது.

A tyre stuck round this crocodiles neck: now reward to anyone brave enough to free crocodile from tyre

2018 ஆம் ஆண்டில் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் இருந்து முதலை உயிர் தப்பியது - ஆனால் டயர் மட்டும் அதன் கழுத்திலிருந்து விடுபடவில்லை.

இதனிடையே கழுத்து நெறிக்கப்படுவதால் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கும் முதலையை காப்பாற்ற வேண்டும் என முடிவு செய்த இந்தோனேஷியாவின், மத்திய சுலவேசியின் இயற்கை வள பாதுகாப்பு அலுவலகம் (பி.கே.எஸ்.டி.ஏ) இந்த வாரம் அதை விடுவிக்க வைப்பதற்காக ஒரு போட்டியைத் தொடங்கியது.

"சந்தோஷத்தை இழந்து உயிரை காப்பாற்ற போராடி வரும் அந்த முதலையின் கழுத்தில் சிக்கியுள்ள டயரை விடுவித்து அதை காப்பாற்றும் எவருக்கும் வெகுமதி வழங்கப்படும்" என்று மத்திய சுலவேசி பி.கே.எஸ்.டி.ஏ தலைவர் ஹஸ்முனி ஹஸ்மர் தெரிவித்தார். ஆனால் என்ன வெகுமதி என்பது குறித்த கூடுதல் விவரங்களை ஹஸ்மர் தெரிவிக்கவில்லை.

முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்ற இரண்டு முயற்சிகள் நடந்துள்ளன. 2018 ஆம் ஆண்டில், பாதுகாவலரும் "விலங்கு விஸ்பரருமான" முஹம்மது பன்ஜி ஒரு முயற்சியை மேற்கொண்டார், அந்த ஆண்டின் பிற்பகுதியில் பாதுகாப்பு அலுவலகம் முதலைக்கு இறைச்சியை கொடுத்து ஈர்க்க முயன்றது. இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்தன.

English summary
Indonesia offering reward to anyone brave enough to free an enormous wild crocodile from a motorcycle tire
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X