• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தப் பாட்டி பார்க்க எவ்ளோ அழகா, அமைதியா இருக்கு.. ஆனா இதோட மறுபக்கம் தெரியுமா?

Google Oneindia Tamil News

மாஸ்கோ: இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்பார்கள் நம் பக்கத்தில்.. ஊமைக் குசும்பு பிடித்தவர்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இது. இப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது இந்தப் பாட்டி முகத்தை் பார்த்தபோது. ஆனால் இவரது பின்னணி தெரியுமா.. இவர் யார் தெரியுமா.. அது ஒரு பயங்கரமான வரலாறு.

இவர் ஒரு காலத்தில் ரஷ்யாவின் மிகப் பெரிய உளவாளி. அதை விட மிக கவர்ச்சிகரமான அபாயகரமான உளவாளி என்று சொல்லலாம். தனது அழகை வலையாக்கி, பலரை அதில் இரையாக்கி இவர் கறந்த தகவல்கள் எத்தனை எத்தனை.. சொல்லி மாள முடியாது.

இவர்தான் மோரா புத்பெர்க். இவரது வாழ்க்கை மிகப் பெரிய வரலாறு.. கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் நிச்சயம் சாமானியர்கள் மலைத்துப் போய் விடுவார்கள்.

ஓ மரியா

ஓ மரியா

மரியா இகன்டியவ்னா ஜக்ரெவ்ஸ்க்யா என்பது இவரது இயற்பெயர். உக்ரைனின் பொலோடாவா மாகாணத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஜார் ஆட்சியாளர்களின் நிர்வாகத்தில் சட்ட அதிகாரியாக இருந்தவர்.

18 வயதில் திருமணம்

18 வயதில் திருமணம்

தனது 18வது வயதில் 1911ம் ஆண்டு ஜான் வான் பென்சென்டார்ப் என்ற தூதரக அதிகாரியைத் திருமணம் செய்தார் மரியா. அடுத்தடுத்து 3 குழந்தைகளையும் பெற்றார்.

பிரிட்டிஷ் தூதரகத்தில் வேலை

பிரிட்டிஷ் தூதரகத்தில் வேலை

முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் செயலாளர் -மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார் மரியா.

ஆண்கள் சகவாசம்

ஆண்கள் சகவாசம்

அப்போதுதான் அவருக்கு ஆண் சகவாசம் அதிகரித்தது. தூதரக அலுவலகத்தில் இருந்த ராபர்ட் ப்ரூஸ் லாக்கார்ட் என்பவருடன் மிக நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். இதையடுத்து ராபர்ட்டை ரஷ்ய அரசு கைது செய்தது.

கைதிகள் பரிமாற்றம்

கைதிகள் பரிமாற்றம்

இதையடுத்து சோவியத் யூனியனைச் சேர்ந்த மாக்ஸிம் லித்வினோவ் என்ற தூதரக அதிகாரியை இங்கிலாந்து கைது செய்தது. அதன் பின்னர் நடந்த சமரசப் பேச்சுக்குப் பின்னர் இருவரும் விடுதலை செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.

மரியா வயிற்றில் பிரிட்டிஷ் குழந்தை

மரியா வயிற்றில் பிரிட்டிஷ் குழந்தை

இந்த நிலையில், ராபர்ட்டுடன் கொண்ட உறவால் கர்ப்பமடைந்தார் மரியா. ஆனால் அது பாதியிலேயே கலைந்து போனது.

மாக்ஸிம் கார்க்கியின் செயலாளராக

மாக்ஸிம் கார்க்கியின் செயலாளராக

அதன் பின்னர் புகழ் பெற்ற இலக்கியவாதி மாக்ஸிம் கார்க்கியின் இலக்கிய செயலாளராக புது அவதாரம் பூண்டார் மரியா. ரஷ்ய இலக்கிய கலாச்சாரத்திற்கு அப்போது புதுமுகம் கொடுத்து வந்தவர் கார்க்கி.

எச்.ஜி. வெல்ஸுடன் ஒன் நைட்

எச்.ஜி. வெல்ஸுடன் ஒன் நைட்

பின்னர் கார்க்கியின் வீட்டிலிருந்தபடி செயல்பட ஆரம்பித்தார் மரியா. அது 1921ம் ஆண்டு. ஒரு நாள் இங்கிலாந்தைச் சேர்ந்த எச்.ஜி.வெல்ஸ் அங்கு வருகை தந்தார். இரவு கார்க்கி வீட்டில் தங்கினார். அப்போது மரியாவின் பார்வை வலையில் வீழ்ந்தார் வெல்ஸ். இருவரும் உறவில் இறங்கினர்.

லெனினால் விரட்டப்பட்ட கார்க்கி

லெனினால் விரட்டப்பட்ட கார்க்கி

இந்த நிலையில் 1922ம் ஆண்டு லெனினுக்கும், கார்க்கிக்கும் முட்டல் மோதல் வந்தது. நாட்டை விட்டு விரட்டப்பட்டார் கார்க்கி. அவரோடு சேர்ந்து மரியாவும் வெளியேறினார். முதலில் பெர்லின் சென்றனர். பின்னர் சொரன்டோ போனார்கள்.

முதல் கணவர் படுகொலை

முதல் கணவர் படுகொலை

இந்த நிலையில் மரியாவின் முதல் கணவர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து எஸ்தோனியாவைச் சேர்ந்த பாரன் புத்பெர்க்கை மணந்தார் மரியா. இது வசதிக்காக செய்யப்பட்ட திருமணம் அல்ல. மாறாக தனக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக செய்த திருமணம் அது. அதை விட முக்கியமாக பாரனின் கடன்களை மரியா தனது பணத்தைக் கொடுத்து அடைத்தார்.

ரியோ டி ஜெனீரோ

ரியோ டி ஜெனீரோ

அதன் பின்னர் ரியோ டிஜெனீரோவுக்கு தனது கணவருடன் இடம் பெயர்ந்தார் மரியா. அங்கிருந்து இங்கிலாந்து செல்வதே அவரது திட்டமாகும். அங்கு போய் ப்ரூஸுடன மீண்டும் உறவைத் தொடரும் ரகசியத் திட்டத்தையும் அவர் வைத்திருந்தார்.

விடாது துரத்திய வெல்ஸ்

விடாது துரத்திய வெல்ஸ்

மறுபக்கம் வெல்ஸ் மீண்டும் மரியாவைத் துரத்தத் தொடங்கினார். ஆனால் அவரை சட்டை செய்யவில்லை மரியா. இந்தக் கூத்தையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தார் பாரன் புத்பெர்க்.

இங்கிலாந்து விஜயம்

இங்கிலாந்து விஜயம்

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார் மரியா. அதன் பின்னர் அவரது வாழ்க்கையில் பல மாற்றம். ப்ரூஸுடன் இணைவது என்ற திட்டத்தை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்படுத்த ஆரம்பித்தார் மரியா. அவரது வலையில் வீழ்ந்தவர்களை விரல் விட்டு எண்ண முடியாது என்ற நிலை.

50 வயது வரை விடாத ஆட்டம்

50 வயது வரை விடாத ஆட்டம்

மரியாவின் 50வது வயது வரை அவரது ஆண் வேட்டை தொடர்ந்தது. பல தரப்பட்டவர்களுடன் பழக்கம் கொண்டிருந்தார் மரியா. அவர்கள் மூலம் பல தகவல்களைப் பெற்று ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்து வந்தார்.

சொகுசு வாழ்க்கை

சொகுசு வாழ்க்கை

மரியாவின் வாழ்க்கை மிகவம் ஆடம்பரமாக மாறிப் போனது. அவருக்கு ஏவல் செய்ய ஆண்கள் காத்துக் கிடந்ததனர். தினசரி பார்ட்டிதான். தினசரி கொண்டாட்டம்தான். தனது குழந்தைகளை தனது வாழ்க்கை முறையிலிருந்து தள்ளியே வைத்து வளர்த்து வந்தார் மரியா.

ஜெர்மனிக்கும் உளவு பார்த்தார்

ஜெர்மனிக்கும் உளவு பார்த்தார்

ரஷ்ய உளவாளியாக இருந்தபோதிலும் அவர் ஜெர்மனிக்காகவும் உளவு பார்த்ததாகவும் ஒரு தகவல் உண்டு. பல உளவுத்துறையினருடன் நல்லுறவைப் பேணி வந்தார். இவர் பறக்காத நாடு இல்லை, இவர் போகாத ஊர் இல்லை.

1974ல் மரணம்

1974ல் மரணம்

சோவியத் உளவாளிகளிலேயே மிகப் பிரபலமானவர் இந்த மரியாதான். இவரது கவர்ச்சியும், அழகான பேச்சும், புத்திசாலித்தனமும்தான் இவரது மூலதனம். மிக மிக பிசியான வாழ்க்கை வாழ்ந்து வந்த மரியா 1974ம் ஆண்டு மரணமடைந்தார்.

கார்க்கியின் நூல்களின் காவலர்

கார்க்கியின் நூல்களின் காவலர்

மாக்ஸிம் கார்க்கியிடம் பிரியம் வைத்திருந்த மரியா, அவரது படைப்புகள் பலவற்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தார். பல சூட்கேஸ்கள் நிறைய அவற்றை வைத்தசிருந்தார். பல ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்த அவை, கடைசியக அவர் இத்தாலி போயிருந்தபோது நெருப்பில் எரிந்து போய் விட்டது.

இரும்புப் பெண்

இரும்புப் பெண்

மரியா மீது பாசத்துடன் இருந்தவரான கார்க்கி, அவரை இரும்புப் பெண் என்றுதான் கூப்பிடுவார். தைரியமான பெண்ணாகவும் வலம் வந்தவர் மரியா. இன்றும் கூட ரஷ்யப் பெண்களுக்கு தைரியத்திற்கான உதாரணமாக முன் வைக்கப்படுபவர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார் என்பது சுவாரஸ்யமானது.

மிக அபாயகரமான உளவாளியாக இருந்தபோதிலும், கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக வைத்துப் பிரபலமானவர் என்ற போதிலும் ரஷ்யர்களால் மறக்க முடியாத ஒரு பெண் மரியா.

English summary
Was Moura Budberg Russia’s most seductive spy? Not surprisingly, her seductiveness has dominated accounts of her life. Born Maria Ignatievna Zakrevskaia in the Poltava province of Ukraine, the youngest daughter of a high-ranking tsarist legal official, she married the diplomat Djon von Benckendorff in 1911, at the age of 18, and gave birth to three children in rapid succession.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X