For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. செவிலியர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவை புரட்டிப்போட்ட கோரோனா வைரஸ்! தெரிந்து கொள்ள வேண்டியவை

    பெய்ஜிங்: சீனாவில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் செவிலியர் ஒருவர் அதிர்ச்சி அளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் கொரோனா வைரஸ் வவ்வாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் அவர்களுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.

    இது வரை இந்த வைரஸ் பாதிப்பால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். 1500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

     "கரோனா" வைரஸ்.. வவ்வால்களிலிருந்து பாம்புக்கும்.. பாம்புகளிலிருந்து மனிதர்களுக்கும்.. ஷாக் தகவல்கள்

    மாகாணம்

    இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸால் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண் செவிலியர் ஒருவர் பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். தான் சீனாவில் உள்ள ஷகாண் மாகாணத்தில் ஒரு மருத்துவமனையில் பணியாற்றுவதாக அந்த செவிலியர் தெரிவித்துள்ளார். அவர் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    கண்டறியப்பட்ட இடம்

    கண்டறியப்பட்ட இடம்

    அவர் கூறுகையில் கொரோனா வைரஸ் எங்கு கண்டறியப்பட்டதோ அந்த இடத்திலிருந்து பேசுகிறேன். நான் இங்கு உங்களிடம் உண்மையை பேச வந்துள்ளேன். சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸுக்கு இதுவரை 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்?

    நிலைமை

    நிலைமை

    வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபரை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ஒரே சமயத்தில் 14 பேருக்கு இந்த வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. சீன புத்தாண்டு பிறந்துள்ளது. சீன மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று புத்தாண்டு கொண்டாட விரும்புகின்றனர். ஆனால் நிலைமை தற்போது மோசமாக உள்ளது.

    குடும்பத்தினர்

    குடும்பத்தினர்

    இந்த வீடியோவை பார்க்கும் நீங்கள் எங்கும் வெளியே செல்லாதீர். எந்த கொண்டாட்டங்களும் வேண்டாம். வெளியே விற்பனை செய்யப்படும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். இப்போது பாதுகாப்பாக இருங்கள். ஆண்டுக்கு ஒரு முறை புத்தாண்டு வந்து கொண்டுதான் இருக்கும். அடுத்த முறை குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடிக் கொள்ளலாம். முதலில் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள்.

    செவிலியர்

    செவிலியர்

    வுகான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு முகமூடி, முகக் கண்ணாடி, துணிகளை நன்கொடையாக வழங்குங்கள். கொரோனா வைரஸ் இரண்டாம் நிலைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. முதல் நிலையில் இருந்தால் குணப்படுத்திவிடலாம். ஆனால் இரண்டாம் நிலையில் மிகவும் கடினம் என அந்த செவிலியர் எச்சரிக்கும் விதமாக அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    English summary
    A Nurse in Wuhan, China says that she is treating 90,000 patients who affects Corona Virus. A video releases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X