For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிலிப்பைன்ஸில் ஒவ்வொரு ஆண்டும் கடலில் 4 செ.மீ. அளவுக்கு மூழ்கும் கிராமம்!

Google Oneindia Tamil News

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சிட்டியோ பரியாஹான் என்ற கிராமம் ஒவ்வொரு ஆண்டும் கடலில் 4 செ.மீ. அளவுக்கு மூழ்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் மணிலாவிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் சிட்டியோ பரியாஹான் ஆகும். முன்பொரு காலத்தில் தனித்தீவாக இருந்த இந்த கிராமம் தற்போது நிலப்பரப்பே இல்லாத அளவுக்கு கடலில் மிதக்கிறது.

புவி வெப்பமயமாதல் பிரச்சினையால் கடலில் உள்ள நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கி வருகிறது.

அடிப்படை வசதிகள்

அடிப்படை வசதிகள்

அதாவது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 செ.மீ. அளவுக்கு, அதாவது 1.5 அடி அளவுக்கு கடலில் மூழ்கி வருகிறது. அடிப்படை வசதிகளே இந்த கிராமத்தில் இல்லை. இந்த கிராமத்தில் ஒரே ஒரு கிணறுதான் முக்கிய நீராதாரமாக உள்ளது. கிராம மக்கள் அனைவரும் இந்த கிணற்றை நம்பியே உள்ளனர். இந்த நீரையே குடிக்க, குளிக்க, உணவு சமைக்க பயன்படுத்துகின்றனர்.

டிவிதான் பொழுதுபோக்கு

டிவிதான் பொழுதுபோக்கு

அது போல் மின்சாரமும் கிடையாது. பெரும்பாலானோர் சூரிய மின்சக்தி தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். அதன் மூலம் டிவி பார்க்கின்றனர். அந்த மின்சாரத்தை அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் பகிர்ந்தளிக்கின்றனர்.

சூதாட்டம் விளையாடும் மக்கள்

சூதாட்டம் விளையாடும் மக்கள்

டிவி இல்லாவிட்டால் அப்பகுதி மக்கள் சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் நீதிமன்றமும் சர்ச்சும் இருந்தன. ஆனால் அவை 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலில் அழிந்துவிட்டன. இந்த புயலில் பள்ளியும் அதன் சுற்றுச்சுவரும் அடித்து சென்றுவிட்டது. 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இன்னும் திரும்பவில்லை.

படகுகள்

படகுகள்

கிராமத்தில் உள்ள அனைவரும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியவர்கள் ஆவர். கடலின் நீர் மட்டம் அதிகரிப்பதை காணும் அப்பகுதி மக்கள் மூங்கில்களை கொண்டு வீட்டை உயர்த்தி வருகின்றனர்.
இந்த கிராமத்தை விட்டு வெளியே வர மிகப் பெரிய படகுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

English summary
Sitio Pariahan, about 17 km (10.5 miles) north of Manila, is sinking about 4 cm (1.5 inches) every year because of sea water risening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X