For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"குக்கூ குக்கூ".. விசிலடிச்சான் மக்கள்.. எல்லாமே "விஸ் விஸ்"தான்.. நோ பேச்சு.. எந்த ஊர்னு தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: துருக்கியில் வடக்கு பகுதியில் உள்ள மலைபாங்கான பகுதிகளில் துருக்கி மொழியை பேசாமல் விசில் மூலம் அங்குள்ள மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் வினோதம் நடைபெறுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் ஒருவர் தொடர்பு இல்லாமல் தொலைதூரங்களில் இருந்த போது விசில் மொழி மூலம் மட்டுமே தங்கள் கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஓயாக்சாகா, மெக்சிகோ, ஆப்பிரிக்காவின் அட்லாஸ் மலைகள், பிரேசிலியன் அமேசான், வடக்கு லாவோஸ் மற்றும் கேனரி தீவுகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இந்த விசில் மொழி தற்போது துருக்கி நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் தங்கள் பெயரை சொல்லவும், வீட்டில் என்ன சமைத்தாய் என கேட்கவும் கூட இந்த விசில் மொழியை பயன்படுத்துகிறார்கள். அந்த பகுதியில் சிறந்த விசில் மொழியாளர் மூசஸ் கோசக் கூறுகையில் சிறு வயது முதல் இந்த விசில் மொழியை பயன்படுத்தி வருகிறேன்.

விஷயம்

விஷயம்

இந்த மொழிக்கு குஷ் டிலி என பெயராகும். இதை இன்றும் அப்பகுதி மக்கள் கற்றுக் கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் வேகமாக தகவலை பரிமாறிக் கொள்ள முடிகிறது என்கிறார்கள். இந்த மொழி 300-ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்டு வருகிறது. விசில் மூலம் என்னால் எந்த விஷயத்தையும் தெரிவிக்க முடியும்.

நாக்கை மடித்து

நாக்கை மடித்து

ஒவ்வொரு விரல்களை பயன்படுத்துவதன் மூலம் வித்தியாசமான ஒலிகள் எழும். கட்டை விரல்கள் குறைந்த ஒலியையும் சுண்டு விரல்கள் அதிக சப்தத்தை எழுப்பவும் பயன்படுத்தலாம். நாக்கை மடித்துக் கொண்டு விசில் அடித்தாலும் அதிக ஒலியை எழுப்பும்.

குறைந்த ஒலி

குறைந்த ஒலி

அதிக ஒலி எழுப்பினால் நீண்ட தூரத்திற்கு செல்லாது. ஆனால் குறைந்த ஒலிகள் நீண்ட தூரத்திற்கு செல்லும். அதிக தூரத்திற்கு ஒலி செல்ல வேண்டும் என்றால் நடுவிரல்களை கொண்டு விசில் அடிக்க வேண்டும். இந்த மொழி எங்கள் கிராமத்தில் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. எங்கள் கிராமத்தில் 100 பேரில் 50 பேர் மட்டுமே இந்த மொழியை பேசுகிறார்கள்.

மொழி

மொழி

செல்போன்கள் வந்ததால் மக்கள் இந்த மொழிகளை பேசுவதில்லை, சில ஆப்பிள் பழங்களை பறித்து வா என தூரத்தில் இருந்து நாங்கள் கூறினாலும் அது அந்த ஆப்பிள் மரத்திற்கு பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்கும். இந்த மொழியை நாங்கள் உயிர்ப்போடு வைத்துக் கொள்ள விரும்புகிறோம் என்றார்.

விசில் மொழி

விசில் மொழி

அது போல் லஷ் மலைத்தொடர்களில் உள்ள கிராமங்களில் பறவைகள் மொழி பேசப்படுகிறது. இந்த மொழி கலாச்சார சின்னம் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்ஹான் என்பவர் கூறுகையில் நான் விசில் மொழி பயிற்சியாளர். நான் மட்டுமே இந்த மொழியை கற்றுக் கொடுக்கிறேன். விசில் மொழியையும் கலாச்சாரத்தையும் இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதே எனது லட்சியம்.

படிப்படியாக

படிப்படியாக

தொழில்நுட்பத்துடன் நாங்கள் போராடி வருகிறோம். தூரத்தில் இருப்பவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம். அது நல்ல கருவிதான். ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் இணைப்பு துண்டிப்பாகும். இந்த மொழியை கற்றுக் கொடுக்க ஒரு பள்ளியும் இருந்தது. 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் ஆரம்பத்தில் 160 மாணவர்கள் பயின்றனர். தற்போது 2016இல் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது என்றார்.

English summary
In the lush mountains of Northern Turkey a centuries old language and tradition has been passed on from generation to generation; speaking the 'Bird Language and Whistle language.'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X