For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் பேசுவதை கேட்கிறது.. என்னை பின்தொடர்கிறது.. பேஸ்புக் மீது போலீசில் புகார்!

பேஸ்புக் தான் பேசுவது எல்லாவற்றையும் கேட்பதாக கூறி போலீஸ் நிலையத்தில் அமெரிக்கர் ஒருவர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக புகார் அளித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: பேஸ்புக் தான் பேசுவது எல்லாவற்றையும் கேட்பதாக கூறி போலீஸ் நிலையத்தில் அமெரிக்கர் ஒருவர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக புகார் அளித்து இருக்கிறார். மேலும் இதில் தான் செய்வது எல்லாவற்றையும் பேஸ்புக் கண்காணிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அவர் என்னவெல்லாம் பேசுகிறாரே அதை எல்லாம் பேஸ்புக் விளம்பரமாக அவரது டைம் லைனில் காட்டியதை அடுத்து அவர் இவ்வாறு புகார் அளிக்க முடிவு செய்து இருக்கிறார். மேலும் இதேபோல் பல பேர் பேஸ்புக் தங்கள் பேசுவதை கேட்பதாக சமீப காலங்களில் கூறிவருகின்றார்.

அவர் இன்னும் சில நாட்களில் முறையாக வழக்கு தொடுக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். பேஸ்புக் நிர்வாகம் இதற்கு வித்தியாசமான விளக்கம் கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 பேஸ்புக் செய்யும் மோசடி

பேஸ்புக் செய்யும் மோசடி

பேஸ்புக்கில் சமீப காலமாக அனைவருக்கும் இந்த விஷயம் நடந்து வருகிறது. நாம் எதைப்பற்றி அடிக்கடி பேசுகிறோமோ அதை பற்றி எல்லாம் பேஸ்புக் நமக்கு விளம்பரங்கள் காண்பிப்பதாக கூறப்படுகிறது. உதாரணமாக நாம் பீட்ஸா பற்றி பேசினால் உடனே பேஸ்புக் டைம்லைனில் பீட்ஸா குறித்த விளம்பரம் வரும். முதலில் நாம் கூகுளில் சர்ச் செய்யும் விஷயங்கள் மட்டுமே பேஸ்புக்கில் அதிகமாக விளம்பரமாக வந்தது. அப்போது பேஸ்புக்கும் , கூகுளுக்கு கூட்டணி வைத்து இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது நாம் பேசும் விஷயங்களை கூட பேஸ்புக் கண்காணிப்பதாக புகார் வருகிறது.

பல மொழியில் விளம்பரம்

இந்த நிலையில் பேஸ்புக்கில் ஒரு பெண்ணுக்கு வித்தியாசமான சம்பவ நிகழ்ந்து இருக்கிறது. பல மொழிகள் தெரிந்த இவர் போனுக்கு அருகில் எந்த மொழியில் பேசியிருக்கிறாரோ சரியாக அந்த மொழியில் விளம்பரத்தை காண்பித்து இருக்கிறது பேஸ்புக் நிறுவனம். அவரது பேஸ்புக் ஆப்பில் மொழி ஆங்கிலத்தில் இருக்கும் போதும் கூட அவர் என்ன மொழியில் பேசுகிறாரே அதில் விளம்பரம் வந்து இருக்கிறது. அவர் வேறு மொழியில் பேசினால் அந்த மொழியிலும் விளம்பரம் வந்து இருக்கிறது.

விளம்பரம் காரணமாக வழக்கு

இதையடுத்து தற்போது அவர் பேஸ்புக் நிறுவனம் மீது வழக்கும் தொடுக்க முடிவு செய்து இருக்கிறார். இன்னும் சில நாட்களில் முறையாக தகவல்களை சேகரித்து பேஸ்புக் மீது வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் பேஸ்புக் நாம் பேசுவதை போனில் இருக்கும் மைக் மூலமாக கேட்டு அதை வைத்து விளம்பரம் தருவதாக கூறியிருக்கிறார். ஒரு தனியார் அமைப்பு அமெரிக்காவில் இதுகுறித்து புகார் அளிக்க புகார் எண் ஒன்றையும் கொடுத்து இருக்கிறது.

மறுப்பு தெரிவித்தது பேஸ்புக்

இந்த நிலையில் இதை பேஸ்புக்கில் விளம்பர பிரிவில் இருக்கும் ராப் கோல்ட்மேன் என்ற நபர் இதை மறுத்து இருக்கிறார். அதில் அவர் ''நாங்கள் இதுவரை போனில் இருக்கும் மைக்கை விளம்பரம் சம்பத்தப்பட்ட விஷயங்களுக்காக பயன்படுத்தியது இல்லை'' என்று கூறியிருக்கிறார். மேலும் ''பேஸ்புக் லைவ் வீடியோக்கள், வீடியோ கால், பேஸ்புக் கால் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே மைக் பயன்படுத்தப்படுகிறது'' என்றும் கூறியிருக்கிறார்.

English summary
A woman in America filled a complaint against Facebook . She says Facebook is following her and listening to her whatever she talks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X