For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யூ டியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய பெண்.. உண்மையான காரணம் என்ன!

யூ டியூப் வீடியோக்கள் மூலம் வரும் வருமானம் குறைந்ததால் அமெரிக்காவை சேர்ந்த நசீம் அஃதாம் என்ற பெண் யூ டியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சுந்தர் பிச்சையை கலங்க வைத்த துப்பாக்கி சூடு..

    கலிபோர்னியா: யூ டியூப் வீடியோக்கள் மூலம் வரும் வருமானம் குறைந்ததால் அமெரிக்காவை சேர்ந்த நசீம் அஃதாம் என்ற பெண் யூ டியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார். பின் அந்த பெண் தன்னையே துப்பாக்கியால் சுட்டு மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

    நேற்று மாலை கலிபோர்னியாவில் இருக்கும் யூ டியூப் நிறுவன தலைமையகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த இவர் சரமாரியாக சுட்டு உள்ளார். இவரது வீடியோக்களுக்கு வரும் வியூக்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் குறைந்து இருக்கிறது.

    இதனால் இவரது வருமானமும் குறைந்து உள்ளது. இதற்கு பின்பு யூ டியூப் நிறுவனம் மோசமான செயல் ஒன்றை செய்ததாக நசீம் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

    விளம்பரங்களில் மாற்றம்

    2017 மத்தியில் யூ டியூப் நிறுவனம் தங்களது தளத்தில் இருக்கும் வீடியோ சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்தது. அதன்படி மோசமான வீடியோக்கள், மக்களை தவறான வழியில் கொண்டு செல்லும் வீடியோக்கள், கலவரத்தை உண்டாக்கும் வீடியோக்கள், பாலியல் சம்பந்தப்பட்ட வீடியோக்களுக்கு வருமானம் கிடையாது, அதற்கு விளம்பரமும் வராது என்று விதிகளை மாற்றியது.

    குறைத்து

    குறைத்து

    அதேபோல் 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி செல்லும் வீடியோக்களுக்கு கொடுக்கப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கையை குறைத்து இருக்கிறார்கள். இதனால் பலருக்கு விளம்பரம் மூலம் வரும் வருமானம் குறைந்து இருக்கிறது. இதனால் நசீமிற்கு யூ டியூப் மூலம் வந்த வருமானமும் குறைந்து இருக்கிறது.

    குற்றச்சாட்டு வைத்து இருந்தார்

    குற்றச்சாட்டு வைத்து இருந்தார்

    இதனால் நசீம் தன்னுடைய இணையதள பக்கத்தில் கோபமாக யூ டியூப் குறித்து போஸ்ட் போட்டு இருக்கிறார். தன்னுடைய வீடியோக்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை யூ டியூப் செய்த விதி மாற்றம் காரணமாக குறைந்து இருக்கிறது என்றுள்ளார். தன் வீடியோக்களுக்கு அதிக பார்வையாளர்கள் வந்தது, யூ டியூப் நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை என்று குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

    மரணம்

    மரணம்

    இந்த கோபத்தில் அவர் நடத்திய துப்பாக்கி சூட்டில், யூ டியூப் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3 பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த பெண்ணின் யூ டியூப் பக்கம், பேஸ்புக் பக்கம், டிவிட்டர் பக்கம், இன்ஸ்டாகிராம் பக்கம், இணையதள பக்கம் எல்லாம் மொத்தமாக முடக்கப்பட்டு இருக்கிறது. நசீமின் உடல் பிரதேச பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.

    English summary
    A woman named Nasim Aghdam fired in YouTube head office for low views in videos. She has been arrested for the violence. Three people injured in this incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X