For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏர்போர்ட்டிற்கு லேட்டாக வந்த பெண்.. ஓடும் விமானத்தை துரத்தி ரன்வேயில் ஓடிய அதிசயம்.. என்ன நடந்தது?

இந்தோனேசியாவில் விமான நிலையத்திற்கு காலதாமதமாக வந்த பெண், விமானத்தை துரத்திக் கொண்டு ஓடிய சம்பவம் வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஏர்போர்ட்டிற்கு லேட்டாக வந்த பெண்.. ஓடும் விமானத்தை துரத்தி ரன்வேயில் ஓடிய அதிசயம்-வீடியோ

    ஜகர்த்தா: இந்தோனேசியாவில் விமான நிலையத்திற்கு காலதாமதமாக வந்த பெண், விமானத்தை துரத்திக் கொண்டு ஓடிய சம்பவம் வைரலாகி உள்ளது.

    இந்தோனேசியாவின் பாலி தீவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பெண்ணின் பெயர் ஹன்னா என்று கூறப்படுகிறது.

    பாலியில் இருந்து ஜகர்த்தா நோக்கி செல்லும் விமானத்தை பிடிக்கத்தான் அந்த பெண் விமான ஓடு தளத்தில் வேகமாக ஓடி இருக்கிறார்.

    10 நிமிடம்

    10 நிமிடம்

    அந்த பெண் செல்ல வேண்டிய விமானம் காலை 7.20 மணிக்கு. ஆனால் அவர் மிகவும் தாமதமாகத்தான் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். 7.10க்குத்தான் விமான நிலையத்தை அவர் அடைந்துள்ளார்.

    அனுமதி இல்லை

    அனுமதி இல்லை

    இதனால் அவர் சோதனை செய்யும் அதிகாரிகளிடம் செல்லவில்லை. அங்கு இருந்து தடுப்புகளை மீறி சென்றுள்ளார். போர்டிங் பாஸ் கூட வாங்காமல் வேகமாக தடைகளை தாண்டி முறையின்றி உள்ளே ஓடியுள்ளார்

    ஓடினார்

    வேகமாக ஓடியவர் பின் ரன்வேயில் விமானத்தை நோக்கி ஓடி இருக்கிறார். விமானம் புறப்பட்டு அப்போதுதான் நகர தொடங்கியது. அந்த நேரம் பார்த்து விமானத்தை நோக்கி ஓடியுள்ளார். ஆனால் அங்கிருந்த விமான பணியாளர்கள் அவரை தடுத்துள்ளனர். இதனால் அவருக்கும் பணியாளர்களுக்கும் இடையில் சண்டை வந்து உள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    விசாரணை

    விசாரணை

    இந்த நிலையில் இந்த சம்பவம் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது. இவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அடுத்த விமானம் வரும்வரை பொறுத்திருக்க முடியாது என்பதால் அப்படி ஓடியதாக அந்த பெண் கூறியுள்ளார்.

    English summary
    A woman ran in run-way to chase down Plane after missing her Flight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X