For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்க ராணுவ தளபதி நடுங்கிட்டார்.. இந்தியாவுக்கு பயந்துதான் அபிநந்தனை விட்டோம்.. பாக். எம்.பி. பேச்சு

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடியாக தாக்கியிருக்கும் என்று பயந்து போய்தான், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் விடுதலை செய்யப்பட்டார் என்று பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நல்லெண்ண அடிப்படையில், இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்ததாக இதுவரை பாகிஸ்தான் கூறி வந்தது.

இப்போது முதல் முறையாக அந்த நாட்டு எம்பி ஒருவர், பாகிஸ்தானில் அபிநந்தன் பிடிபட்ட பிறகு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களையும் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.

அபிநந்தன் கைது

அபிநந்தன் கைது

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான, அயாஸ் சித்திக் என்பவர் நாடாளுமன்றத்தில் இதுபோல பேசியதாக துனியா நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை துரத்திக் கொண்டு சென்றபோது, அபினந்தன் செலுத்திய விமானம் சுடப்பட்டது. எனவே, பாகிஸ்தானில் பாராசூட் மூலமாக கீழே குதித்தார் விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான். அப்போது பாகிஸ்தான் படையினரால் அவர் சிறை வைக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

திரும்ப ஒப்படைப்பு

திரும்ப ஒப்படைப்பு

பிடிபட்ட விங் கமாண்டர் அபினந்தனை, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்டது. இந்திய தரப்பிலிருந்து அப்போது வெளிப்படையாக பெரிய எதிர்வினைகள் ஆற்றவில்லை. இதனடையே, மார்ச் 1ம் தேதி அபிநந்தன், அட்டாரி-வாகா எல்லையில் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அடித்து தூக்க ரெடியான இந்தியா

அடித்து தூக்க ரெடியான இந்தியா

அபினந்தன் பிடிபடுவதற்கு சில நாட்கள் முன்புதான், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய போர் விமானங்கள் பறந்து சென்று தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்து இருந்தன. இந்த நிலையில்தான் அபிநந்தன் பிடிபட்டதும் அவரை ஒப்படைக்காவிட்டால் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு உள்ளே புகுந்து அடித்து தூக்கி விடும் என்ற அச்சம் அந்த நாட்டு ராணுவத்திற்கும், அரசுக்கும் வந்துள்ளது.

கூட்டம் நடந்தது

கூட்டம் நடந்தது

அயாஸ் சித்திக் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இது பற்றி பேசியதை பாருங்கள்: அபிநந்தன் பிடிபட்ட பிறகு நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி ஒரு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். பிரதமர் இம்ரான்கான் பங்கேற்க மறுத்தார். இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா பங்கேற்றிருந்தார்.

கால் நடுங்கிப் போச்சு

கால் நடுங்கிப் போச்சு

கமர் ஜாவித் பஜ்வா, மீட்டிங் நடைபெற்ற அறைக்குள் வரும்போதே, அவரது கால்கள் நடுங்கிக் கொண்டு இருந்ததை என்னால் கவனிக்க முடிந்தது. பயந்துபோய் காணப்பட்டார். வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, எங்களிடம் ஒரு விஷயத்தை அழுத்தந்திருத்தமாக தெரிவித்தார். அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கா விட்டால், இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தும். அதுவும் இன்று இரவு 9 மணிக்குள் இந்தியா நம்மைத் தாக்க ஆரம்பித்து விடும் என்று அவர் கூறினார். எனவே எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அபிநந்தனை விடுதலை செய்யும் அரசின் முடிவுக்கு நாங்கள் ஒப்புதல் கொடுத்தோம். இவ்வாறு அயாஸ் சித்திக் தெரிவித்துள்ளார். இதனிடையே பாகிஸ்தான் எம்பியின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வீடியோவாகவும் பரவி வருகிறது. இந்திய ராணுவத்தின் வீரத்தை பார்த்து, பாகிஸ்தான் அச்சத்தில் உறைந்து இருப்பதை பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு உறுதிசெய்துள்ளது.

English summary
Wing Commander Abhinandan Varthaman issue: Pakistan Army chief General Qamar Javed Bajwa's "legs were shaking" while Foreign Minister Shah Mehmood Qureshi told a meeting of parliamentary leaders that India was about to attack their country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X