For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ் அத்துமீறல்கள்தான் இந்தியாவின் முக்கிய மனித உரிமைப் பிரச்சினை... சொல்கிறது அமெரிக்கா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவின் முக்கிய மனித உரிமை பிரச்சினை போலீசாரின் அத்துமீறலே என அமெரிக்க ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு பல்வேறு நாடுகளில் நிலவிய மனித உரிமைப் பிரச்சினைகள் குறித்த ஆய்வு அறிக்கையை நேற்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வெளியிட்டார்.

அதில், இந்தியாவில் போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்தான் இந்தியாவின் மிகப் பெரிய மனித உரிமை பிரச்னை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல்...

ஊழல்...

மேலும், ஊழல், பெண்கள், குழந்தைகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணையில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதும் இந்தப் பிரச்னைகளில் அடங்கும்.

குஜராத் வன்முறை...

குஜராத் வன்முறை...

அதோடு, கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் வன்முறையின் போது, 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இதற்கு காரணாமானவர்கள் மீது நவடவடிக்கை எடுக்க குஜராத் அரசு தவறிவிட்டது என்று மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

அத்துமீறல்கள்...

அத்துமீறல்கள்...

இதேபோல், சிறைச்சாலையில் ஏற்படும் மரணங்கள், சித்திரவதைகள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினரால் செயயப்படும் அத்துமீறல்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய மனித உரிமை மீறல் பிரச்னை என்கிறது இந்த ஆய்வு.

கொலைகள்...

கொலைகள்...

இது தவிர, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும், மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர், போலீசார், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கொல்லப்படுவது இன்னொரு முக்கிய மனித உரிமை மீறல் பிரச்சினை என்கிறது இந்த ஆய்வு.

English summary
Abuses by police and security forces are the most significant human rights problem in India, the US said on Thursday while raising concerns by civil society over the ‘failure’ of the Gujarat government to hold accountable those responsible for the 2002 riots in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X