For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்ஸ் ரயில் நிலையத்தில் 4 அமெரிக்க மாணவிகள் மீது ஆசிட் வீச்சு

Google Oneindia Tamil News

பாரிஸ்: அமெரிக்க கல்லூரி மாணவிகள் நான்கு பேர் ஞாயிற்றுக்கிழமை தெற்கு பிரான்சிலுள்ள மார்ஸிலீஸில் ரயில் நிலையத்தில் அமிலம் வீசி தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

கர்ட்னி சிவர்லிங், சார்லட் காப்மேன், மிச்சல் கிரக், கெல்ஸி காஸ்டன் ஆகி நான்கு பெண்களும் இருபது வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் இருவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நான்கு மாணவிகளையும் மருத்துவமனையில் சேர்த்தனற்.

 Acid attack on 4 US students

இந்த நான்கு பேரும் பாரீஸில் தங்கிப் படித்து வருபவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு மனநிலை பாதிக்கப்பட்ட 41 வயதான பெண்ணே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அந்த பெண்ணைக் கைது செய்தனர். அவர் மனநிலை சரி இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தாக்குதல் கொடியது என்றாலும் இதில் பயங்கரவாத தொடர்புடைய எந்த அறிகுறியும் இல்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

தகவல்: சஹாயா

English summary
4 US students ware attacked with acid in a railway station in France. Police have arrested a woman in this regard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X