For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலிஃபோர்னியா: யு டியூப் தலைமை நிறுவனத்தில் பெண் துப்பாக்கி சூடு- மூவர் படுகாயம்

அமெரிக்காவில் உள்ள யு டியூப் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    சுந்தர் பிச்சையை கலங்க வைத்த துப்பாக்கி சூடு..

    கலிஃபோர்னியா: வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள யு டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய பெண் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனமான யு டியூப், வீடியோ சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சான் ஃபருனோ என்ற இடத்தில் அமைந்துள்ளது.

    Active shooter at YouTube head office in California

    நேற்றிரவு அலுவலகம் முடிந்து வெளியே வந்தவர்களை துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண் மிரட்டியதோடு திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்திய பெண்ணும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அந்த அலுவலகத்தின் ஊழியர்கள் தங்களது இரு கைகளையும் உயர தூக்கியபடி வெளியே வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் கலிஃபோர்னியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    யு டியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதால் அப்பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    அலுவலகத்தில் நுழைந்த பெண் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி, தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும், இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அங்கு பள்ளிகள், பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெறுவது சர்வ சாதாரணமாகி வருகிறது. இந்த நிலையில் யு டியூப் நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    English summary
    At least three people are injured after a shooting at YouTube's headquarters in San Bruno, California, police confirm.A female suspect is dead from a self-inflicted gunshot wound, NBC News reports.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X