For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரோகின்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை !! உடனடியாக நிறுத்த மியான்மருக்கு மலாலா வலியுறுத்தல்!!!

Google Oneindia Tamil News

மியான்மரில் ரோகின்யா முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்டு வரும் வன்முறை மற்றும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மலாலா வலியுறுத்தியுள்ளார்.

மியான்மர் அரசாங்கத்தால் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக ரோகின்யா முஸ்லீம்கள் கருதப்பட்டு வருகின்றனர். இதனால் வேற்று இனத்தவர்கள் போன்று பார்க்கப்படும் ரோகின்யா முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

malala

இந்நிலையில் ரோகின்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை சம்பவங்களை, அவர்கள் துன்புறுத்தப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மியான்மர் நாட்டு தலைவர்களிடம், நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானின் மலாலா யூஸப் ஸாய் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மியான்மரில் வாழும் மக்களுக்கு இணையான உரிமைகளும், சலுகைகளும் ரோகின்யா முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு என்றும் மலாலா கூறியுள்ளார்.

பல தலைமுறைகளாக மியான்மரில் வாழ்ந்து வரும் நிலையில் ரோகின்யா முஸ்லிம்களும் அந்நாட்டின் மக்கள்தான் என்றும், தான் ரோகின்யா முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடப்போவதாகவும் மலாலா கூறியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக சுமார் 25,000 ரோகின்யா முஸ்லீம்கள் தஞ்சம் தேடி வருவதால், இந்தியாவும் அவர்கள் மீதான தாக்குதல் குறித்து கவலை கொண்டுள்ளது.

English summary
Activist and Nobel Peace Prize winner Malala Yousafzai is standing with the Rohingya and urges to Stop assaulted on them
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X