For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மவுனத்தால் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : UNICEF South Asian Parliamentarian Conference

    சுவிஸ்: இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சல் பாச்லெட் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அதன் தலைவர் மிச்சல் பாச்லெட், ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரச்சனைகள் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

    Activists shocked over UN Human Rights Council silence over Sri lanka

    ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப வேண்டும்; மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை பிரச்சனை குறித்து எந்த ஒரு கருத்தையும் மிச்சல் பாச்லெட் குறிப்பிடவில்லை.

    இலங்கையில் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் கதி என்ன? போர்க்குற்றவாளி ஒருவரையே இலங்கை ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சர்ச்சை உள்ளிட்டவை குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத் தலைவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    இம்ரான்கான் கட்சி மாஜி எம்.எல்.ஏ. குடும்பத்துடன் இந்தியாவில் அரசியல் அடைக்கலம் கோருகிறார்!இம்ரான்கான் கட்சி மாஜி எம்.எல்.ஏ. குடும்பத்துடன் இந்தியாவில் அரசியல் அடைக்கலம் கோருகிறார்!

    இது உலகத் தமிழர்களை மட்டுமல்ல மனித உரிமை ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே இலங்கை ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது குறித்து மிச்சல் பாச்லெட் கவலை தெரிவித்திருந்தார்.

    ஆனால் தற்போதைய கூட்டத்தில் அவர் எதுவுமே குறிப்பிடாதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Human Rights activists very shocked over the UN Human Rights Council Chief's silence over the Srilanka Issues.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X