For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“அம்மா வர்றாங்க... கைப்புள்ள தூங்கு”... சுட்டிகளின் லகலக வீடியோ!

Google Oneindia Tamil News

சிட்னி: அம்மாவின் குரலைக் கேட்டு இரண்டு குட்டீஸ்கள் தூங்குவது போல் நடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவைப் பார்த்தால், "அடேங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி" என சொல்லாமல் இருக்க முடியவில்லை.

குழந்தைகளின் உலகம் எப்போதுமே அழகானது, கள்ளங்கபடமற்றது. ஆனால், சமயங்களில் அவர்கள் செய்யும் சுட்டித்தனமான செயல்கள் பெரியவர்களை வியப்பில் ஆழ்த்தி விடும்.

அந்தவகையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூடி என்ற பெண், தனது குழந்தைகளின் சுட்டித்தனத்தை வீடியோ பதிவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இரட்டையர்...

இரட்டையர்...

ஜூடிக்கு இரண்டு பெண் குழந்தைகள். இருவரையும் அருகருகே சிறிய கட்டிலில் தூங்க வைத்து விட்டு சமையல் செய்வதற்காகச் சென்றுள்ளார் ஜூடி.

சிசிடிவி...

சிசிடிவி...

சமையலறையில் இருந்தாலும் தன் சுட்டிக் குழந்தைகளைக் கண்காணிப்பதற்காக அவர்களது அறையில் சிசிடிவி கேமராவும், கூடவே சமையலறையில் இருந்து பேசினால் கேட்பதற்கு வசதியாக ஒரு ஸ்பீக்கரும் அமைத்துள்ளார் ஜூடி.

ஜாலி விளையாட்டு...

ஜாலி விளையாட்டு...

சம்பவத்தன்று, சமையலறையில் இருந்த படியே தன் குழந்தைகள் இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்து விளையாடுவதை சிசிடிவி கேமரா மூலம் பார்த்துள்ளார் ஜூடி. அப்போது திடீரென தனது குரலைக் கேட்டால் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார் அவர்.

ஹாய் பேபீஸ்...

ஹாய் பேபீஸ்...

எனவே, ‘ஹாய் பேபீஸ்' னு வயர்லெஸ் மைக் வழியாக ஜூடி குழந்தைகளைக் கொஞ்சினார். அவ்வளவு தான், அதுவரை ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளும், ‘அயய்யோ அம்மா வர்றாங்க' என தனது படுக்கையில் படுத்து தூங்குவது போல் நடிக்கத் தொடங்குகின்றன.

வீடியோ...

இந்த க்யூட்டான வீடியோவை ஜூடி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். குழந்தைகளின் தூங்குவது போல பாசாங்கு செய்யும் இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

English summary
These adorable twin girls know exactly what to do when they think their mum is on the way - act like they are asleep.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X