For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணாந்து பார்த்தா ஸ்டார்களுக்கு நடுவுல பளிச்சுனு ஒரு விளம்பரம்.. ரஷ்ய நிறுவனத்தின் அடடா ஐடியா!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வானத்தில் ஒளி வடிவில் விளம்பர பலகை வைக்க திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஸ்டார் ராக்கெட். இந்த நிறுவனம் சிறிய ரக செயற்கைகோள்களை பயன்படுத்தி வானத்தில் விளம்பர பலகை வைக்க திட்டமிட்டுள்ளது.

adverdisements in space soon

அதன்படி, க்யூட்சீட்ஸ் எனப்படும் சிறிய ரக செயற்கைகோள்கள், பூமியில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும். அந்த செயற்களைகோள்கள் சூரிய ஒளியின் அடிப்படையில் செயல்படும். இரவு நேரத்தில் பிரமாண்ட வெளிச்சத்தில் விளம்பரங்களை அந்த செயற்கைகோள்கள் ஒளிப்பரப்பும்.

கார் நம்பர் பிளேட்டில் ஆபாச வார்த்தைகள்.. சென்னையில் கல்லூரி மாணவர் கைது!கார் நம்பர் பிளேட்டில் ஆபாச வார்த்தைகள்.. சென்னையில் கல்லூரி மாணவர் கைது!

இந்த திட்டத்தை ஸ்டார் ராக்கெட் நிறுவனத்தை சேர்ந்த விளாடிலென் சிட்னிகோவ் வடிவமைத்துள்ளார். ஆனால் இந்த திட்டத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். செயற்கைகோள்கள் ஒளி மாசை ஏற்படுத்தி, நட்சத்திரங்களின் ஒளியை குறைத்துவிடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேபோல், சமூக வலைதளங்களிலும் இத்திட்டத்திற்கு எதிராக கருத்துகள் பரவ ஆரம்பித்துவிட்டன. இது ஒளி மாசை ஏற்படுத்தும் என்றும், பூமியில் உள்ள மனிதர்கள் யாரும் இதனை விரும்பவில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பிரபல குளிர்பான நிறுவனமான பெப்சி இந்த யோசனையை முன்வைத்து, பின்னர் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Instead of stars lighting up the night sky, it could soon be billboards. A Russian startup's plan to use the space to display ads has come under significant public criticism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X