For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்... தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 பேர் பலி!

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

காபூலில் இன்று நீதிமன்ற ஊழியர்களை ஏற்றிகொண்டு வந்த வாகனம் ஒன்றை குறிவைத்து இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Afghan Official: Suicide Bombing in Kabul Kills 10 People

தாக்குதல் சம்பவம் தொடர்பாக எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருந்த போதிலும் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த தலிபான் முயற்றி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டார். இதையடுத்து, தலிபான் இயக்கத்திற்கு புதிய தலைவராக ஹைபதுல்லா அஹுகுன்சடா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

English summary
Ten people were killed in Afghanistan today when a suicide bomber on foot detonated his explosives, striking a vehicle carrying court employees near the capital Kabul, the interior ministry said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X