For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெஷாவர் தாக்குதலுக்கு ஆப்கான் தலிபான்கள் கண்டனமாம்!

By Mathi
Google Oneindia Tamil News

காபூல்: பாகிஸ்தானின் பெஷாவர் பள்ளிக்கூடத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தலிபான்களின் ஒரு பிரிவாகத்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்- இ தலிபான் அமைப்பும் இயங்கி வருகிறது. ஆனால் சில தாக்குதல் சம்பவங்களின் போது இரண்டு அமைப்புகளும் எதிர்ப்பது போல் காட்டிக் கொள்கின்றன.

Afghan Taliban condemn Peshawar school attack

இந்த வகையில்தான் பெஷாவர் பள்ளி தாக்குதலை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கண்டித்துள்ளனர். அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் எமிரேடானது அப்பாவி குழந்தைகளைப் படுகொலை செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கிறது.

திட்டமிட்டு குழந்தைகள், பெண்களை படுகொலை செய்திருப்பது இஸ்லாத்துக்கு எதிரானது. இதனை எந்த ஒரு இஸ்லாமிய அரசும் ஏற்காது. பெஷாவர் தாக்குதலில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

கடந்த வாரம்தான் காபூரில் பிரான்ஸ் கலசார மையம் மீது ஆப்கான் தலிபான்கள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The Afghan Taliban have condemned a raid on a school in Peshawar that left 141 dead in the country's bloodiest ever terror attack, saying killing innocent children was against Islam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X