For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாலிபான்கள் ஒரே ஜாலி.. ஆற்றங்கரையில் போட்ட ஆட்டம்.. வீடியோ வெளியாகி பரபரப்பு.. வைரலாகும் டான்ஸ்

தாலிபான்கள் நடனம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கன் மக்களே கதிகலங்கி போயுள்ள நிலையில், தாலிபான்கள் எதை பற்றியும் கவலைப்படாமல், டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில், புதிய ஆட்சி அமைந்துள்ளது.. ஆனால், அதிலும் நிறைய குழப்பங்களும், அதிகார மோதல்களும் தாலிபான்களுக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம், புதிய கட்டுப்பாடுகளையும், பெண்களுக்கு எதிரான அறிவிப்புகளையும் வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.

தாலிபான் வந்தால்தான் நாங்களும் வருவோம்.. அடம்பிடித்த பாகிஸ்தான்.. மொத்தமாக ரத்தான சார்க் மாநாடு! தாலிபான் வந்தால்தான் நாங்களும் வருவோம்.. அடம்பிடித்த பாகிஸ்தான்.. மொத்தமாக ரத்தான சார்க் மாநாடு!

சமாதானம்

சமாதானம்

பழைய ஆட்சி போல நடந்து கொள்ள மாட்டோம், பெண்களுக்கு சுதந்திரம் உள்ளது, ஆட்சி பொறுப்பு உள்ளது, பயப்பட வேண்டாம்என்று தாலிபான்கள் சமாதானம் சொல்லினர்.. ஆனால், நடப்பதை எல்லாம் பார்த்தால் அப்படி தெரியவில்லை.. தாலிபான்களின் பேச்சை அந்நாட்டு பெண்கள் நம்பவுமில்லை.. புதிய ஆட்சியை நிறுவியும்கூட, பெண்களுக்கு உரிய பங்களிப்பை அவர்கள் தரவில்லை..

ஆண்கள்

ஆண்கள்

எல்லாவற்றிக்கும் மேலாக, கல்வி, வேலைவாய்ப்பில், பெண்களுக்கான உரிமைகளை தாலிபான்கள் மறுத்துள்ளனர்... ஆடைக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி இல்லை.. திரைச்சீலை உதவியுடன் தனியாக பிரித்து அமரவைக்கப்படுகிறார்கள்.. இதனால், பெண்கள் கலங்கி போயிருந்தாலும், தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகிறார்கள்..

டான்ஸ்

டான்ஸ்

இப்படிப்பட்ட சூழலில்தான், தாலிபான்களின் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. அங்குள்ள அர்கந்தாப் என்ற ஆற்றங்கரையில் தாலிபான்கள் டான்ஸ் ஆடும் வீடியோ சிக்கி உள்ளது.. பின்னணியில் ஒரு பாட்டு ஒலிக்கிறது.. அது அவர்களின் தேசபக்திபாடலாம்.. அதில் 7, 8 தாலிபானகள் ஒன்றாக சேர்ந்து டான்ஸ் ஆடுகிறார்கள். இப்படியெல்லாம் அவர்கள் இத்தனை காலம் வரை பாட்டு பாடி, டான்ஸ் ஆடியது கிடையாதாம்.

தேசபக்தி

தேசபக்தி

ஏனெனில், 1996 முதல் 2001 வரையிலான தாலிபான்கள் ஆட்சியில், இசைக்கும் தடை, நடனத்துக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இப்போதைக்கு அவர்கள் தேசபக்தி பாட்டுக்கு டான்ஸ் ஆடும் அளவுக்கு வந்துள்ளது அனைவருக்கும் வியப்பை தந்துள்ளது.. இந்த டான்ஸ்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதேசமயம், உலக மக்களின் ஆதங்கமும் பெருகி வருகிறது.

Recommended Video

    4 பேரை கொடூரமாக கொன்று பொது இடத்தில் தொங்கவிட்ட தாலிபான்கள் | Oneindia Tamil
    விடியோ

    விடியோ

    இவர்கள் மட்டும் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்களே, பெண்களின் உரிமைகளுக்கும் ஒரு வழி செய்யக்கூடாதா? அவர்களின் உரிமைகளை மறுத்து வருகிறார்களே என்று தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படித்தான் கடந்த மாதம் இன்னொரு வீடியோ வெளியாகி இருந்தது.. அதில், தாலிபான்கள் ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருந்தார்கள்..

    பீதி

    பீதி

    அங்குள்ள பார்க்குகளுக்கு சென்று விளையாடி கொண்டும், சவாரி செய்து கொண்டும், குதிரைகளில் ஏறி வலம் வந்தும், மின்சார பம்பர் கார்களில் சவாரி செய்தும் குஷியாக காணப்பட்டனர்.. பொதுமக்கள் பீதியால் உயிரை கையில் பிடித்து கொண்டு காபூல் ஏர்போர்ட்டிலும் பிற பகுதிகளிலும் தப்பித்து ஓடிக் கொண்டிருந்த நிலையில், தாலிபான்கள் மட்டும் ஜாலியாக விளையாடிய அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Afghan: Talibans national song and their dance go viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X