For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாலிபானின் உச்சபட்ச தலைவர் கொலை?.. கடத்தப்பட்டாரா துணை பிரதமர் பராதர்?.. என்ன நடக்கிறது ஆப்கானில்?

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு இடையில் மிகப்பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருவதாகவும் அங்கு துணை பிரதமர் முல்லா கானி பாராதார் கடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக பிரபல பிரிட்டன் ஊடகமான தி ஸ்பெக்டேட்டர் ஊடகம் முக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்றாலும் அங்கு இன்னும் முறையாக ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி கிட்டத்தட்ட 10 நாட்கள் கழித்துதான் அங்கு இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டது. அதை அறிவிப்பதற்கு உள்ளாகவே தாலிபான்களுக்கு இடையில் கடும் மோதலும், சண்டையும் ஏற்பட்டது.

யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது, யாருக்கு பதவி கொடுப்பது என்று தெரியாமல் தாலிபான்கள் இடையே கடும் குழப்பம் ஏற்பட்டது. கடைசியில் ஒரு வழியாக அங்கு இடைக்கால பிரதமர் மற்றும் 33 அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெயரை தாலிபான்கள் வெளியிட்டது. முல்லா ஹாசன் அகுண்ட் நாட்டின் இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டார். முல்லா கானி பராதார் நாட்டின் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். முல்லா கானி பராதார் நாட்டின் பிரதமராக அறிவிக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ஆச்சர்யமாக இவருக்கு துணை பிரதமர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹைபதுல்லா அகுண்சாடா நாட்டின் உச்சபட்ச தலைவராக இருப்பார்.

ஓ.பி.எஸ், இ.பி.எஸ். பதவிகளுக்கு தடை இல்லை... ஹைகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பால் சசிகலாவுக்கு பின்னடைவா? ஓ.பி.எஸ், இ.பி.எஸ். பதவிகளுக்கு தடை இல்லை... ஹைகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பால் சசிகலாவுக்கு பின்னடைவா?

சண்டை

சண்டை

இந்த நிலையில்தான் அங்கு முல்லா கானி பராதாருக்கு பிரதமர் பதவி கிடைக்க விடாமல் ஹக்கானி சகோதரர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. அனாஸ் ஹக்கானி, கலீல் ஊர் ரஹ்மான் ஹக்கானி, சிராஜுதீன் ஹக்கானி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து பாராதாருக்கு எதிராக பேசியதாகவும், தங்களுக்கு ஆதரவாக இருக்கும் முல்லா ஹாசன் அகுண்டை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியானது. இதில் ஹக்கானி சகோதரர்கள் மூலம் பராதார் மோசமாக தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

வீடியோ

வீடியோ

ஆனால் தாலிபான் அமைப்பின் தலைவர்கள் சிலர் இதை மறுத்து இருந்தனர். அதோடு பராதார் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம், நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த தகவல் எல்லாம் சுத்த பொய், ஹக்கானி சகோதரர்கள் துணை பிரதமர் பராதாரை தாக்கியது உண்மைதான். அவரை ஹக்கானி சகோதரர்கள் கடத்தி வைத்து உள்ளனர் என்று பிரபல பிரிட்டன் ஊடகமான தி ஸ்பெக்டேட்டர் ஊடகம் முக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

கட்டாயபடுத்தி பேச சொன்னார்கள்?

கட்டாயபடுத்தி பேச சொன்னார்கள்?

பராதாரை கடத்தி தனி இடத்தில் வைத்து உள்ளனர். அவரை கட்டாயப்படுத்தி வீடியோ வெளியிட்டு பிரச்சனை எதுவும் இல்லை என்று கூற சொல்லி இருக்கிறார்கள். அங்கு நிலைமை மோசமாக இருக்கிறது. மொத்த தாலிபானும் ஹக்கானி நெட்வொர்க் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. பராதார் உள்ளிட்ட தலைவர்கள் மற்ற பூர்வகுடி மக்கள் ஒடுக்கப்பட்டு உள்ளனர். தாலிபான்களுக்கு இடையிலேயே பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபானின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பராதாரை ஓரம்கட்டிவிட்டனர் என்று அந்த ஊடகம் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Recommended Video

    Afghan விஷயத்தில் Americaவை குற்றஞ்சாட்டும் தாலிபான்கள் | OneIndia Tamil
     முகத்தில் குத்தினார்?

    முகத்தில் குத்தினார்?

    அதிலும் பராதார் எப்படி தாக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்களையும் விரிவாக இந்த கட்டுரை குறிப்பிட்டுள்ளது. அதில் கலீல் ஹக்கானி பேச்சுவார்த்தையின் போது தான் அமர்ந்து இருந்த இருக்கையை தூக்கி பராதார் தலையில் அடித்து உள்ளார். அதன்பின் தான் குடித்துக் கொண்டு இருந்த கிரீன் டீயை சுட சுட பராதார் மூஞ்சில் வீசி உள்ளார். இதில் அவரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. ஹக்கானி நெட்வொர்க் என்பது தாலிபானில் இருக்கும் இன்னொரு குழு. தனியாக இருந்த குழு தாலிபானுடன் இணைந்து போராடி வந்தது.

    மோசம்

    மோசம்


    ஹக்கானி சகோதரர்கள் உருவாக்கிய குழுவாகும் இது. மிக மிக மோசமான அசாசினேஷன் குழு இதுவாகும். தாலிபானை விட பாகிஸ்தான் இந்த ஹக்கானி குழுவிற்குதான் அதிக ஆதரவு கொடுத்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தலைவர் ஆப்கானிஸ்தான் வந்ததே ஹக்கானி குழுவை சந்திக்கத்தான். தற்போது அங்கு பிரதமராக இருக்கும் முல்லா ஹாசன் அகுண்ட் வெறும் பொம்மைதான். ஹக்கானி சகோதரர்களும், பாகிஸ்தானும்தான் இவரை கட்டுப்படுத்துகிறது என்று அந்த ஊடகம் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

    பராதர் கோரிக்கைகள் என்னென்ன?

    பராதர் கோரிக்கைகள் என்னென்ன?

    துணை பிரதமர் பராதர் தனக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும். தனது பிரிவு பழங்குடி மக்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று கேட்டதால் பராதரை ஹக்கானி சகோதரர்கள் மோசமாக தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கு பிரதமர் பவர் இல்லாமல் இருக்கிறார், பொம்மை ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்தி வருகிறது என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அதோடு தாலிபான்களின் உச்சபட்ச தலைவர் ஹைபதுல்லா அகுண்சாடா கொல்லப்பட்டு இருக்க அதிக வாய்ப்புள்ளதாக ஊடகம் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

    அகுண்டசாடா கொலை?

    அகுண்டசாடா கொலை?

    அவர் கந்தகாரில் இருக்கிறார். விரைவில் மக்கள் முன் தோன்றுவார் என்று கூறினார்கள். ஆனால் ஒரு மாதம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. அவர் கொல்லப்பட்டுவிட்டார். இதை தாலிபான்கள் அறிவிக்காமல் மறைத்து வருகிறது. அவர் முன்பே பலியாகி இருக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால்தான் இடைக்கால அரசு அறிவிப்பின் போது கூட உச்சபட்ச தலைவர் குறித்த அறிவிப்பே வெளியாகவில்லை என்று பிரிட்டன் ஊடகமான தி ஸ்பெக்டேட்டர் தெரிவித்துள்ளது. விரைவில் அங்கு தாலிபான்களுக்கு உள்ளேயே பெரிய மோதல் வெடிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    English summary
    Haqqani network attacks: Afghanistan Deputy PM Baradar on hostage,Supreme Leader Akhunzada killed says Britain report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X