For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவின் அடுத்த மையப்புள்ளியாக மாறப்போகும் ஆப்பிரிக்கா.. 300,000 பேர் பலியாகலாம்.. ஹூ எச்சரிக்கை

Google Oneindia Tamil News

கேப்டவுன்: கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த மையப்புள்ளியாக ஆப்பிரிக்கா மாறக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. இந்த தொற்றுநோய் ஆப்பிரிக்காவில் குறைந்தது 300,000 மக்களைக் கொன்று கிட்டத்தட்ட 30 மில்லியனை வறுமையில் தள்ளும் என்று ஐ.நா அதிகாரிகள் அபாயத்தை விவரிக்கிறார்கள்.

Recommended Video

    சீன சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதா?.. விசாரணையை தொடங்கும் அமெரிக்கா

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் முதல் வேகமாக பரவி வருகீறது. ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் கிட்டத்தட்ட 1,000 பேர் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 19,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பாதிப்பு என்பது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளை விட மிகக் குறைந்த விதிகங்களாகத்தான் இப்போதைய நிலையில் உள்ளது.

    இந்நிலையில் ஆப்பிரிக்காவிற்கான ஐ.நா. பொருளாதார ஆணையம் கொரோனாவால் ஆப்பிரிக்காவில் 300,000 பேர் இறக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் பாதுகாப்பிற்கு 100 பில்லியன் டாலர் இப்போது தேவை என்று கூறுகிறது.

    குட் நியூஸ்.. வேகமாக குணமாகும் கொரோனா நோயாளிகள்.. ரெம்டெசிவிர் மருந்து தான் காரணம்! கசிந்த வீடியோ குட் நியூஸ்.. வேகமாக குணமாகும் கொரோனா நோயாளிகள்.. ரெம்டெசிவிர் மருந்து தான் காரணம்! கசிந்த வீடியோ

    நெரிசலான சேரிப் பகுதி

    நெரிசலான சேரிப் பகுதி

    இந்த கொரோனா வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளின் தலைநகரங்களில்வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்த தொற்றுநோயைக் கையாள்வதற்கு போதிய வென்டிலேட்டர்கள் இந்த கண்டத்தில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்காவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை அத்துடன் கிட்டத்தட்ட 60% நகரவாசிகள் நெரிசலான சேரிப் பகுதியில் வாழ்கின்றனர். இப்படிப்பட்ட சூழல்கள் தான் கொரோனா வைரஸ் செழிக்கக்கூடிய சூழ்நிலைகள் ஆகும்.

    அல்ஜீரீயாவில் பாதிப்பு

    அல்ஜீரீயாவில் பாதிப்பு

    ஆபிரிக்காவில் கிட்டத்தட்ட 19,000 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. ஆப்பிரிக்காவின் முழு கண்டத்திலும் குறைந்தது 970 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் சுமார் 1.3 பில்லியன் மக்கள் தொகை உள்ளது. வட ஆபிரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதி. அல்ஜீரியா, எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளில் 2,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 100பேர் இந்த பகுதிகளில் இறந்துள்ளனர். அல்ஜீரியாவில் மட்டும் 348 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நைஜீரியா நிலவரம்

    நைஜீரியா நிலவரம்

    தென்னாப்பிரிக்காவில் 2,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 பேர் இறந்துள்ளனர். அதே நேரத்தில் ஆப்ரிக்கா கண்டத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த நாட்டில் உள்ள 200 மில்லியன் மக்கள் தொகையில் 13 பேர் இதுவரை கொரோனாவல் இறந்துள்ளனர்.

    இனி எப்படி இருக்கும்

    இனி எப்படி இருக்கும்

    ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது மிக குறைவான வைரஸ் தொற்று இருப்பதற்கு காரணம் குறித்து WHO ஆபிரிக்காவின் இயக்குனர் டாக்டர் மாட்ஷிடிசோ மொயெட்டி பிபிசியிடம் அளித்த பேட்டியில் "நீங்கள் பயணம் செய்யும் மக்களின் விகிதாச்சாரத்தைப் பார்த்தால், ஆப்பிரிக்காவில் சர்வதேச அளவில் பயணம் செய்யும் மக்கள் குறைவாக உள்ளனர். ஆனால் இப்போது வைரஸ் ஆப்பிரிக்காவிற்குள் இருப்பதால், அது வேறு இடத்தைப் போலவே விரைவாகவும் பரவுகிறது என்ற அனுமானத்தின் கீழ் தனது அமைப்பு செயல்பட்டு வருவதாக" அவர் தெரிவித்தார்.

    15நாடுகளில் இல்லை

    15நாடுகளில் இல்லை

    வைரஸ் இப்போது தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கேமரூன் மற்றும் கானாவில் பெரிய நகரங்களில் இருந்து சிறிய பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
    வைரஸ் இதுவரை பரவாத சுமார் 15 ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன, இந்த நாடுகள் வலுவான சமூக தொலைதூர நடவடிக்கைகளை மேற்கொண்டால், அவை வைரஸை உள்ளே வரவிடமால் கட்டுப்படுத்த முடியும் என்று ஆப்பிரிக்க உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

    ஆப்ரிக்காவில் நிலைமை

    ஆப்ரிக்காவில் நிலைமை

    கொரோனா வைரஸ் தொற்று ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் போதுமான பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. நகரங்களில் சில இடங்களில் மட்டுமே வசதிகள் உள்ளன. ஆனால் பல இடங்களில் சிகிச்சை வசதிகள் பற்றாக்குறை இருக்கிறது. பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. ஏற்கனவே 68 டாக்டர்கள் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனாவை தடுக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்களும் ஆப்பிரிக்காவில் மிக ஆபத்தான நிலையில் உள்ளார்கள்.

    English summary
    Africa could become the next epicentre of the coronavirus outbreak, the World Health Organization (WHO) has warned.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X