For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் 96 ஆண்டுகளுக்கு பின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Google Oneindia Tamil News

ஸ்பார்ட்டா: அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் 96 ஆண்டுகளுக்குப் பின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 அலகுகளாக பதிவாகி இருந்தது.

வடக்கு கரோலினா மாகாணத்தின் விர்ஜினியா எல்லைப் பகுதியில் உள்ளூர் நேரம் காலை 8.07 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் பயங்கரமாக குலுங்கின.

After 1924, 5.1 Magnitude Earthquake hits North Carolina

கட்டிடங்கள் குலுங்கி சேதமடைந்ததில் பலர் படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டரில் இது 5.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.

1924-ம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு கரோலினாவில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் இது என கூறப்படுகிறது.அப்போது ரிக்டரில் 5.2 அலகுகள் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக 1916-ல் ஸ்கைலாண்ட் பகுதியில் ரிக்டரில் 5.5 பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக இப்படியான பயங்கர நிலநடுக்க அதிர்வுகளை இதுவரை தாங்கள் எதிர்கொண்டது இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
According to the U.S. Geological Survey, 5.1 magnitude earthquake was felt in North Carolina.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X