For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த நிலாவைக் கையில் பிடிக்கலாம்.. 70 ஆண்டுகளுக்குப் பிறகு 14ம் தேதி வருகிறது 'சூப்பர் மூன்'

சூப்பர் மூன் எனும் அதிக வெளிச்சத்துடன் தோன்றும் நிலாவை வரும் 14ஆம் தேதி காண முடியும் என நாசா தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சூப்பர் மூன் நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வு 70 ஆண்டுகளுக்கு பிறகு இம்மாதம் 14 அம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள நாசா விஞ்ஞானிகள் கடந்த 1948ஆம் ஆண்டு வானில் நிகழ்ந்த ஒரு அறிய நிகழ்வு தற்போது மீண்டும் நடைபெற போவதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வுக்கு சூப்பர் மூன் எனப் பெயர். இது வரும் 14ம் தேதி பவுர்ணமி நாளில் நடைபெறும் என கூறியுள்ளனர்.

நெருங்கி வரும் நிலா

நெருங்கி வரும் நிலா

வழக்கமாக 3 லட்சத்து 84 அயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிவரும் நிலா அன்றைய தினம் அதன் தொலைவில் இருந்து பூமியை நெருங்கி வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வழக்கத்தை விட பெரிதாக இருக்கும்

வழக்கத்தை விட பெரிதாக இருக்கும்

அந்த நாளில் நிலவானது வழக்கத்தை விட மிகப் பெரியதாகவும், 30 மடங்கு வெளிச்சத்துடன் காட்சியளிக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

துபாயில் பார்க்கலாம்

துபாயில் பார்க்கலாம்

துபாயில் உள்ளவர்கள் 14ஆம் தேதி மாலை 5.52 மணிக்கு இந்த நிகழ்வை முழுமையாக காணமுடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. அப்போது நிலா எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை இப்போதே படமாகவும் நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

மிஸ் பண்ணா வருத்தப்படுவீங்க

மிஸ் பண்ணா வருத்தப்படுவீங்க

இந்த அரிய நிகழ்வை தவறாவிட்டால் இதனைக் காண இன்னும் 70 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. துபாய் விண்வெளி ஆராய்ச்சி நடுவத்திலும் இதனைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

English summary
After 1948 this month 14th the super moon is coming. The moon will be visible 30 times brighter than usual, says NASA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X