For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படியே போனா.. மொத்த இந்துக்களும் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவோம்.. அரசுக்கு கடும் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: 15 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் சிறுபான்மை இந்து சமூகத்தினர் சிந்து மாகாணத்தில் ஜேக்கபாபாத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது பாகிஸ்தானின் தலைமை நீதிபதி, ராணுவ தளபதி மற்றும் நாட்டின் பிரதமர் ஆகியோர் நாட்டில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பாகிஸ்தானில் . நான்கு நாட்களுக்குப் பிறகும் 'காணாமல் போன' சிறுமியை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

வெளியேறுவோம்

வெளியேறுவோம்

இதை கண்டு கொதித்து போன இந்து சிறுபான்மையினர், இந்துக்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு உறுதி செய்யாவிட்டால் பாகிஸ்தான் நாட்டை விட்டு ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தினரும் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம் என்று எச்சரித்தனர்.

15வயது இந்து சிறுமி

15வயது இந்து சிறுமி

இந்திய புலனாய்வு வட்டாரங்களின்படி, அந்த இளம் சிறுமி, ஜனவரி 15 ஆம் தேதி யாக்கோபாபாத்தில் இருந்து கடத்தப்பட்டாள். ஜனவரி 18 அன்று, அந்த இளம் சிறுமியின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது,

விரும்பி ஏற்றேன்

விரும்பி ஏற்றேன்

அதில் அவர் அம்ரோட் ஷெரீப் தர்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாகவும், தனது சொந்த விருப்பப்படி ஒரு முஸ்லீம் மனிதரான அலி ராசா மச்சியை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு

பாகிஸ்தானுக்கு

அண்மையில் கடத்தி மதம் மாற்றப்பட்ட 50 வது இந்து சிறுமி இவள் என்று இந்து மதத்தினரின் வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்து சிறுமிகள் கடத்தி மதம் மாற்றப்படுதவற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா பாகிஸ்தான் தூதரை நேரில் வரவழைத்து தனது கண்டனத்தை கடந்த ஜனவரி 17ம் தேதி பதிவு செய்திருந்தது.

English summary
the Hindu leaders warned the Pakistan government that the community members would be forced to leave Pakistan if their security is not ensured
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X