For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

46 கார்கள், 16 பண்ணை வீடுகள்: படுசொகுசாக வாழ்ந்த போதை கடத்தல் மன்னன்.. இப்போது சிறையில்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மெக்சிகோ சிட்டி: போதை கும்பலின் தலைவரான ஜோவாக்கின் எல் சாப்போ கஸ்மேன் கடந்த ஞாயிறன்று மெக்ஸிகோவில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை அமெரிக்க காவல்துறை உறுதி செய்தது.

மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜோவாக்கின் எல் சாப்போ கஸ்மேன் லோயெரா. இவனுக்கு வயது 56. அமெரிக்காவுக்கு போதை பொருள் விநியோகம் செய்வதில் இவன் பெரும் பங்கு வகித்து வந்தான்.

கஸ்மேன் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.30 கோடி பரிசு தொகை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்து இருந்தது. அவனை கடந்த 13 ஆண்டுகளாக சர்வதேச போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில் அவன் மெக்சிகோவில் பசிபிக் கடற்கரை நகரமான மஷட்லானில் கைது செய்யப்பட்டான்.

அங்குள்ள ஓர் ஓட்டலில் பதுங்கியிருந்த அவனை போலீசார் கைது செய்தனர்.

சொகுசு வாழ்க்கை

சொகுசு வாழ்க்கை

போலீசார் நடத்திய சோதனையில், கஸ்மேனுக்கு 46 சொகுசு கார்கள், 16 வீடுகள் மற்றும் 4 பண்ணை வீடுகள் இருந்துள்ளன. அவனுக்கு சொந்தமான வீடுகளில் 7 வீடுகள் சுரங்க பாதை கொண்டதாக அமைந்துள்ளது.

சுரங்கப்பாதை

சுரங்கப்பாதை

இதனால், போலீசார் அவனை கைது வரும்போது தப்பித்து செல்வதற்கு வசதியாக இந்த சுரங்க பாதை இருந்துள்ளது. இந்த சொத்துக்களை தவிர்த்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

ராக்கெட் லாஞ்சர்கள்

ராக்கெட் லாஞ்சர்கள்

அவற்றில் பெரிய வகை ஆயுதங்கள், கைத்துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவையும் பணக்கட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாடுகடத்த கோரிக்கை

நாடுகடத்த கோரிக்கை

அமெரிக்காவிற்கு 25 சதவீத போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் கஸ்மேனுக்கு தொடர்பு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவனை நாடு கடத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

English summary
The Sinaloa drug cartel lost its leader, Joaquin “El Chapo” Guzman, at the height of its power, when the organization had won bloody battles for supremacy over its rivals and established shipping routes around the globe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X