For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி.. புள்ளி வைத்த ரஷ்யா.. கோலமே போட்டுவரும் சீனா.. சத்தமில்லாமல் செம்ம மூவ்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ரஷ்யாவை தொடர்ந்து சீனாவும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. 3வது கட்ட சோதனையை (இறுதிகட்ட சோதனை) மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கிலும் பரவி வரும் நிலையில் விஞ்ஞானிகள் அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இரவு பகலாக வேலை செய்து வருகிறார்கள்.
ரஷ்யா கொரோனாவிற்கு ஸ்பூட்னிக் வி. என்ற தடுப்பூசியைப் பதிவுசெய்த உலகின் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசியை இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாளில் இறுதிகட்டமாக ரஷ்யா சோதிக்க உள்ளது. இந்த சோதனையில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்க உள்ளார்கள்.

இந்நிலையில் சீனா இப்போது அதன் உள்ளூர் நிறுவனங்களில் ஒன்றான உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான கன்சினோ பயோலாஜிக்ஸ் தயாரித்த கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் வேலையை துரிதப்படுத்தி உள்ளது. இதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.

வேறு வேறு ஜாதி.. விரட்டி விரட்டி பேஸ்புக்கில் லவ்ஸ்.. கல்யாணமும் செய்து.. கர்ப்பமுமாக்கிய இளைஞர்!வேறு வேறு ஜாதி.. விரட்டி விரட்டி பேஸ்புக்கில் லவ்ஸ்.. கல்யாணமும் செய்து.. கர்ப்பமுமாக்கிய இளைஞர்!

 கன்சினோ தடுப்பூசி

கன்சினோ தடுப்பூசி

அண்மையில் வெளியான அறிக்கைகளின்படி, சீன மருத்துவ அதிகாரிகள் நிர்ணயித்த படைப்பு மற்றும் அறிவுசார் சொத்து தளங்களுடன் கன்சினோவின் தடுப்பூசி முன்மாதிரி ஒத்துப்போகிறது என்று ஆய்வுகள் நிரூபித்த பின்னர் சீன அதிகாரிகள் அதற்கு காப்புரிமையை வழங்கினர். இதன் மூலம் சீனாவால் அங்கீகரிக்கப்பட்ட முதல் கொரோனா மருந்தாக கன்சினோவின் தடுப்பூசி மாறி உள்ளது.

ஆன்டிபாடிகள் அதிகரிப்பு

ஆன்டிபாடிகள் அதிகரிப்பு

மார்ச் மாதத்தில் ஒப்புதல்களுக்காக முதன்முதலில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சீன தடுப்பூசிக்கு Ad5-nCOV என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பொதுவான குளிர் வைரஸ் விகாரத்தின் பதிப்பைப் பயன்படுத்தி மரபணுப் பொருள்களை மனித உடலில் கொண்டு செல்லவும், மேலும் தொற்றுநோயைத் தடுக்கவும், உடலில் ஆன்டிபாடிகளை அதிகரிக்கவும் உதவியதாக கூறப்பட்டது.

முக்கியமானது இதுதான்

முக்கியமானது இதுதான்

சீனாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு உருவாக்கப்படும் 5 தடுப்பூசிகளில் ஒன்றான Ad5-nCOV தடுப்பூசி தான் தற்போது பாதுகாப்பான தடுப்பூசிகளில் ஒன்று என்று ஆரம்ப ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விஞ்ஞானிகளால் பாசிட்டிவ்வான நோய் எதிர்ப்பு சக்தியைக் கவனிக்க முடிந்தது. மனித உடல் சோதனை I மற்றும் II ம் கட்ட சோதனைகளில் டி-செல் உற்பத்தி அளவை அதிகரித்தது.

3ம் கட்ட சோதனை விரைவில்

3ம் கட்ட சோதனை விரைவில்

இரண்டு கட்ட சோதனைகளை நிறைவு செய்துள்ள இந்த தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பதிலுடன் முழுமையாக இணங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள்னர்.. இந்நிலையில் மூன்றாம் கட்ட (இறுதி) பரிசோதனையை கன்சினோவின் தடுப்பூசியை வைத்து மேற்கொண்டு வருகிறார்கள். . எனினும் முன்னதாக, ஜூன் மாத இறுதியில் சீன இராணுவ அதிகாரிகளால் பயன்படுத்த அவசர அங்கீகாரம் கிடைத்தது.. தற்போது தடுப்பூசி தொடர்பான பணிகள் விரைவு செய்யப்பட்டுள்ளன. ஏஜென்சி தகவல்களின்படி, சீனாவில் பதிவு மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு சீன அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளார்கள்.

ரஷ்யா சர்ச்சையில்

ரஷ்யா சர்ச்சையில்

தற்போது உலகளவில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராசெனெகா, ஃபைசர்-பயோன்டெக் மற்றும் மாடர்னா தெரபியூடிக்ஸ் இன்க் உள்ளிட்டவை மூன்றாம் கட்ட சோதனைகளை எட்டியுள்ள 3 கொரோனா தடுப்பூசிகளாகும். பொது பயன்பாட்டிற்கு ஒரு தடுப்பூசி அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் மூன்றாம் கட்ட சோதனைகளை முடித்தல் அவசியம் ஆகும். . ரஷ்ய தடுப்பூசி 3ம் கட்ட சோதனைக்கு இனிமேல் தான் செல்ல உள்ளதால், அதற்குள் அனுமதி அளித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

English summary
Coronavirus vaccine latest update: After Russia, China grants patent to CanSino vaccine, phase III testing underway
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X