For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து டெலிட் செய்யப்பட்ட போஸ்ட்கள்.. சீனாவின் வெய்போவில் இருந்து வெளியேறும் மோடி.. திருப்பம்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான வெய்போவில் (Weibo) இருந்து வெளியேறும் முடிவை பிரதமர் மோடி எடுத்து இருக்கிறார். அவரின் வெய்போ (Weibo)கணக்கில் இன்று ஏற்பட்ட மாற்றங்கள் இதை உறுதி செய்துள்ளது.

Recommended Video

    Chinese Apps Banned-க்கு பிறகு Modi எடுத்த அதிரடி முடிவு | Modi Weibo Post

    இந்தியா சீனா இடையே ராணுவ ரீதியான மோதலை தொடர்ந்து தற்போது பொருளாதார, தொழில்நுட்ப ரீதியாகவும் மோதல் ஏற்பட்டடுள்ளது. சீனாவிற்கு சொந்தமான 59 செயலிகளை மத்திய அரசு நேற்று முதல்நாள் தடை செய்தது.

    டிக்டாக் - TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் - UC Browser, ஹெலோ - Helo, எம்ஐ கம்யூனிட்டி - Mi Community, செண்டர் - Xender உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த செயலிகள் தடை செய்யப்பட்டது.

    2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்: டிக்டாக் 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்: டிக்டாக்

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இந்த நிலையில் தற்போது சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான வெய்போ (Weibo) தளத்தில் இருந்து மோடி வெளியேற உள்ளார். இந்த வெய்போ (Weibo) என்பது சீனாவில் செயல்படும் டிவிட்டருக்கு நிகரான தளம் ஆகும். இந்த தளத்தில் கடந்த 2015ல் மோடி இணைந்தார். அவர் இணைந்த சில நொடிகளில் பல ஆயிரம் பின்தொடர்பாளர்களை பெற்றுக்கொண்டார்.

    எப்போதும் என்ன செய்வார்

    எப்போதும் என்ன செய்வார்

    எல்லா வருடமும் பிரதமர் மோடி, இந்த வெய்போ (Weibo) செயலியில் அதிபர் ஜிங்பிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதும் வழக்கம். ஆனால் இந்த முறை வெய்போ (Weibo)வில் பிரதமர் மோடி ஜிங்பிங்கை வாழ்த்தவில்லை. அப்போதே இரண்டு பேருக்கும் இடையிலான மனக்கசப்பு வெளிப்படையாக தெரிந்தது. இந்த நிலையில் தற்போது வெய்போ (Weibo) தளத்தில் இருந்து வெளியேறும் முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார்.

    நீக்கப்பட்டது

    நீக்கப்பட்டது

    கடந்த சில நாட்கள் முன்தான் சீனாவின் வீசாட் WeChat செயலியில் இருந்து இந்திய தூதரகத்தின் கணக்கு மற்றும் பிரதமர் மோடியின் கணக்கு டெலிட் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெய்போ (Weibo) தளத்தில் இருந்தும் வெளியேறும் முடிவை மோடி எடுத்துள்ளார். இந்த 5 வருடங்களில் பிரதமர் மோடி மொத்தம் வெய்போவில் (Weibo) 115 போஸ்ட்களை செய்து இருந்தார்.

    டெலிட் செய்யப்பட்டது

    டெலிட் செய்யப்பட்டது

    இந்த நிலையில் இந்த 115 போஸ்ட்களில் 113 போஸ்ட்களை பிரதமர் மோடி டெலிட் செய்துள்ளார். இன்னும் இரண்டு போஸ்ட் மட்டுமே உள்ளது. அது இரண்டும் அதிபர் ஜிங்பிங் உடன் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆகும். வெய்போவில் (Weibo) அதிபர் ஜிங்பிங் புகைப்படங்களை போஸ்ட் செய்தால் அதை எளிதாக டெலிட் செய்ய முடியாது என்பதால் இந்த புகைப்படங்கள் மட்டும் இன்னும் டெலிட் செய்யப்படவில்லை.

    கணக்கு

    கணக்கு

    மற்றபடி அனைத்து போஸ்ட்களும் டெலிட் செய்யப்பட்டுவிட்டது. பொதுவாக வெய்போவில் (Weibo) விஐபி கணக்கு ஒன்றை டீ ஆக்டிவேட் செய்வது கடினம். அதனால் பிரதமரின் கணக்கு இன்னும் வெய்போவில் (Weibo) இருந்து டீ ஆக்டிவேட் ஆகவில்லை. இன்று இரவுக்குள் கணக்கு மொத்தமாக நீக்கப்படும் என்று கூறுகிறார்கள். பிரதமர் மோடிக்கு அந்த கணக்கில் 244000 பின் தொடர்பாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன குழப்பம்

    என்ன குழப்பம்

    இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு மிக மோசமான நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் சீனாவின் வெய்போவில் (Weibo) இருந்து மோடி வெளியேறும் முடிவை எடுத்துள்ளார். இதனால் இந்தியா - சீனாவின் உறவு மொத்தமாக முறியும் என்று கூறுகிறார்கள். இதற்கு சீனர்கள் எப்படி வினையாற்ற போகிறார்கள், என்ன மாதிரி பதில் அளிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    After the ban on the Chinese apps, PM Modi quits Weibo App today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X