For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவுடன் கை கோர்த்த 3 வல்லரசு நாடுகள்.. பெரிதாகும் பிரச்சனை.. மொத்தமாக சிக்கிய ஈரான்!

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ஈரானுக்கு எதிராக பிரிட்டன், கனடா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் ஒன்று திரண்டு உள்ளது. இந்த நான்கு நாடுகளும் நேட்டோவில் உள்ள நாடுகள் ஆகும்.

ஈரான் - அமெரிக்கா இடையில் நிகழ்ந்து வரும் பிரச்சனை உலக நாடுகளுக்கு இடையிலான சண்டையாக உருவெடுத்துள்ளது. விரைவில் இது உலகப் போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் டிரோன் தாக்குதல் நிகழ்த்திய அமெரிக்கா ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்தது.

இதுதான் ஈரான் அமெரிக்கா இடையே சண்டை உருவாக காரணமாக மாறியது. இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் 12 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

ஈரானின் இன்னொரு முக்கிய தலைவரை கொல்ல திட்டம்.. அமெரிக்கா போட்ட ஸ்கெட்ச்.. கடைசியில் என்ன ஆனது? ஈரானின் இன்னொரு முக்கிய தலைவரை கொல்ல திட்டம்.. அமெரிக்கா போட்ட ஸ்கெட்ச்.. கடைசியில் என்ன ஆனது?

மூன்று நாடுகள்

மூன்று நாடுகள்

அமெரிக்காவுடன் மட்டும் நேரடி சண்டையில் இருந்த ஈரான் தற்போது இன்னும் கூடுதலாக மூன்று நாடுகளுடன் சண்டை போட தொடங்கியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன் ஈரானில் இருந்து பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இது விபத்து கிடையாது என்று ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இதில் 176 பேர் பலியானார்கள்.

உக்ரைன் ஏன்?

உக்ரைன் ஏன்?

இது உக்ரைன் நாட்டின் அரசு விமானம். இதனால் ஈரான் மீது உக்ரைன் கடுமையான கோபத்தில் இருக்கிறது. உக்ரைனுக்கும் ஈரானுக்கும் முன்பே வாய்க்கால் தகராறு இருந்தது. இந்த தாக்குதலில் 11 உக்ரைன் மக்கள் பலியானார்கள். இதற்கு உக்ரைன் கண்டிப்பாக பழி வாங்கும் என்கிறார்கள். இது தொடர்பாக ஐநாவில் புகார் அளிக்க உக்ரைன் முடிவு செய்துள்ளது.

ஈரான் ஏவுகணை

ஈரான் ஏவுகணை

இன்னொரு பக்கம் ஈரான் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாக ஈரான் பதில் சொல்லியாக வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார். இந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் மொத்தல் 63 கனடா மக்கள் மரணம் அடைந்தனர். இதனால் இதை மிகப்பெரிய பிரச்சனையாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அணுக தொடங்கி உள்ளார்.

பிரிட்டன் எப்படி

பிரிட்டன் எப்படி

அதேபோல் தற்போது பிரிட்டன் உடனும் ஈரான் சண்டையில் இறங்கி உள்ளது. ஈரானுக்கு பிரிட்டன் கலவரம் ஏற்படுத்த முயல்கிறது. மக்களை கிளர்ச்சிக்கு தூண்டுகிறது என்று ஈரான் கூறி வருகிறது. இதனால் ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைரை கைது செய்யப்பட்டார். வேறு ஒரு நாட்டில் இன்னொரு நாட்டு தூதர் கைது செய்யப்படுவது போருக்கு சமமான நடவடிக்கை ஆகும்.

போர்

போர்

இதற்கு பதிலடியாக பிரிட்டன் ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் நடக்கும் சண்டையில் தற்போது பிரிட்டனும் உள்ளே நுழைந்துள்ளது.இந்த சண்டையில் பிரிட்டன் அமெரிக்காவிற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது. ஈரான் அமெரிக்கா படைகளை தாக்கியது தவறு என்று பிரிட்டன் கூறியுள்ளது.

ஈரான் பதிலடி

ஈரான் பதிலடி

இந்த நிலையில் சுலைமானி கொலையில் பிரிட்டனுக்கும் தொடர்பு இருக்கிறது. பிரிட்டன் அமெரிக்காவின் கையாள். அதனால் அவர்களின் கையிலும் ரத்தக்கறை இருக்கிறது. பிரிட்டனும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று ஈரான் கடுமையாக கண்டித்து இருக்கிறது.

நேட்டோ நாடுகள்

நேட்டோ நாடுகள்

ஆகவே ஈரானுக்கு எதிராக பிரிட்டன், கனடா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் ஒன்று திரண்டு உள்ளது.இந்த நான்கு நாடுகளும் நேட்டோவில் உள்ள நாடுகள் ஆகும். இதனால் மீதமுள்ள நேட்டோ படைகளும் விரைவில் ஈரானுக்கும் எதிராக ஒன்று சேரும் என்கிறார்கள்.

English summary
After the USA, Now Canada, Britain, and Ukraine forces also moves against Iran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X